சங்கீதம் 72:1-20

  • கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவின் சமாதானமான ஆட்சி

    • “நீதிமான்கள் செழிப்பார்கள்” (7)

    • ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும் குடிமக்கள் இருப்பார்கள் (8)

    • வன்முறையிலிருந்து விடுதலை (14)

    • பூமியில் ஏராளமான தானியம் (16)

    • கடவுளுடைய பெயர் என்றென்றும் புகழப்படும் (19

சாலொமோனைப் பற்றிய பாடல். 72  கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+   அவர் உங்களுடைய மக்களுக்காக நீதியோடு வழக்காடட்டும்.உங்களுடைய எளிய ஜனங்களுக்கு நியாயம் வழங்கட்டும்.+   மலைகள் ஜனங்களுக்குச் சமாதானம் தரட்டும்.குன்றுகள் மக்களுக்கு நீதி வழங்கட்டும்.   எளியவர்களுக்காக அவர் வழக்காடட்டும்.ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்.மோசடி செய்கிறவனை ஒழிக்கட்டும்.+   சூரியனும் சந்திரனும் இருக்கும்வரை,தலைமுறை தலைமுறைக்கும்அவர்கள் உங்களுக்குப் பயந்து நடப்பார்கள்.+   வெட்டப்பட்ட புல்வெளிமேல் விழுகிற மழைபோல் அவர் இருப்பார்.பூமிமேல் பொழிகிற மழைநீர்போல் அவர் இருப்பார்.+   அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள்.+சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்.+   ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும்அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள்.+   பாலைவனத்தில் குடியிருப்பவர்கள் அவர் முன்னால் தலைவணங்குவார்கள்.அவருடைய எதிரிகள் மண்ணைக் கவ்வுவார்கள்.+ 10  தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுப்பார்கள்.+ சேபாவின் ராஜாக்களும் சிபாவின் ராஜாக்களும் பரிசுப்பொருள்களைத் தருவார்கள்.+ 11  எல்லா ராஜாக்களும் அவர் முன்னால் தலைவணங்குவார்கள்.எல்லா தேசத்து மக்களும் அவருக்குச் சேவை செய்வார்கள். 12  ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார்.எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார். 13  ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார்.ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். 14  கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.*அவர்களுடைய இரத்தம் அவருடைய கண்களில் அருமையானதாக* இருக்கும். 15  அவர் பல்லாண்டு வாழட்டும், அவருக்கு சேபா தேசத்து தங்கம் கொடுக்கப்படட்டும்.+ அவருக்காக எப்போதும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படட்டும்.அவர் நாளெல்லாம் ஆசீர்வதிக்கப்படட்டும். 16  பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும்.+மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும். அவருடைய விளைச்சல் லீபனோனின் காடுகளைப் போலச் செழிப்பாக இருக்கும்.+பூமியிலுள்ள புல்லைப் போல் நகரங்களிலுள்ள மக்கள் ஏராளமாகப் பெருகுவார்கள்.+ 17  அவருடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.+சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரின் புகழ் ஓங்கட்டும். அவர் மூலம் மக்கள் ஆசீர்வாதம் பெறட்டும்.+எல்லா தேசத்தாரும் அவரைச் சந்தோஷமானவர் என்று புகழட்டும். 18  இஸ்ரவேலின் கடவுளான யெகோவா புகழப்படட்டும்.+அவர் மட்டுமே அற்புதங்களைச் செய்கிறவர்.+ 19  அவருடைய மகிமையான பெயர் என்றென்றும் புகழப்படட்டும்.+அவருடைய மகிமை பூமி முழுவதையும் நிரப்பட்டும்.+ ஆமென், ஆமென்.* 20  ஈசாயின் மகனான+ தாவீதின் ஜெபங்கள் இத்துடன் முடிவடைகின்றன.

அடிக்குறிப்புகள்

அதாவது, “யூப்ரடிஸ் ஆறு.”
வே.வா., “மீட்பார்.”
வே.வா., “மதிப்புள்ளதாக.”
அதாவது, “அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்.”