சங்கீதம் 73:1-28

  • கடவுள்பக்தி உள்ள ஒருவர் மீண்டும் ஆன்மீகக் கண்ணோட்டத்தைப் பெறுகிறார்

    • “நான்தான் கிட்டத்தட்ட வழிதவறிப் போய்விட்டேன்” (2)

    • “நாள் முழுவதும் நான் வேதனைப்பட்டேன்” (14)

    • “கடைசியில், கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்கு வந்தேன்” (17)

    • பொல்லாதவர்கள் சறுக்கலான தரையில் நிற்கிறார்கள் (18)

    • கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் நல்லது (28)

ஆசாப்பின்+ சங்கீதம். 73  சுத்தமான இதயமுள்ள இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் உண்மையிலேயே நல்லவராக இருக்கிறார்.+   நான்தான் கிட்டத்தட்ட வழிதவறிப் போய்விட்டேன்.கால் சறுக்கி விழும் நிலைக்குப் போய்விட்டேன்.+   ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+   அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.*அவர்கள் எந்த வேதனையும் இல்லாமல் சாகிறார்கள்.+   மற்றவர்களுக்கு வருகிற எந்தப் பிரச்சினையும் அவர்களுக்கு வருவதில்லை.+மற்றவர்கள் படுகிற எந்தக் கஷ்டத்தையும் அவர்கள் அனுபவிப்பதில்லை.+   அதனால்தான், ஆணவத்தை ஆபரணம்போல் கழுத்தில் போட்டிருக்கிறார்கள்.+வன்முறையை உடைபோல் உடுத்தியிருக்கிறார்கள்.   செல்வச் செழிப்பால்* அவர்களுடைய கண்கள் உப்பியிருக்கின்றன.மனதில் கோட்டை கட்டியதைவிட சிறப்பாக வாழ்கிறார்கள்.   மற்றவர்களைப் பார்த்துக் கிண்டல் செய்கிறார்கள், மோசமாகப் பேசுகிறார்கள்.+ அடக்கி ஒடுக்கப்போவதாக ஆணவத்தோடு மிரட்டுகிறார்கள்.+   ஏதோ வானத்தையே தொட்டுவிட்டதுபோல் பெருமையடிக்கிறார்கள்.ஊர் உலகமெல்லாம் தங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்கிறார்கள். 10  அதனால் கடவுளுடைய* மக்கள் அவர்கள் பக்கமாகத் திரும்பி,அவர்களிடம் இருக்கிற ஏராளமான தண்ணீரைக் குடிக்கிறார்கள். 11  “இதெல்லாம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது?+ உன்னதமான கடவுளால் இதையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கேட்கிறார்கள். 12  அப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.+ அவர்கள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்துக்கொண்டே போகிறார்கள்.+ 13  அதனால், நான் சுத்தமான இதயத்தோடும்,கறைபடியாத கைகளோடும் வாழ்ந்தது வீணிலும் வீண்தான்.+ 14  நாள் முழுவதும் நான் வேதனைப்பட்டேன்.+ஒவ்வொரு நாள் காலையிலும் கண்டிக்கப்பட்டேன்.+ 15  ஆனால் கடவுளே, நான் இதையெல்லாம் வெளியே சொல்லியிருந்தால்,உங்களுடைய மக்களுக்குத் துரோகியாக ஆகியிருப்பேன். 16  நான் அதைப் புரிந்துகொள்ள முயன்றபோது,வேதனைதான் மிஞ்சியது. 17  கடைசியில், கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்கு வந்தேன்.அப்போதுதான், அவர்களுக்கு வரப்போகிற முடிவைப் பற்றிப் புரிந்துகொண்டேன். 18  நிச்சயமாகவே, அவர்களைச் சறுக்கலான தரையில்தான் நீங்கள் நிற்க வைக்கிறீர்கள்.+ அவர்களை விழ வைத்து ஒழித்துக்கட்டுகிறீர்கள்.+ 19  அவர்களுக்குத் திடுதிப்பென்று அழிவு வருகிறது!+ திடீரென்று கோர முடிவு வருகிறது! 20  தூங்கி எழுந்ததும் மறைந்துபோகிற கனவு போல,யெகோவாவே, நீங்கள் எழுந்ததும் அவர்களை உங்கள் நினைவிலிருந்து மறைந்துபோகச் செய்வீர்கள்.* 21  ஆனால், என் நெஞ்சம் கசந்தது.+உள்ளுக்குள்* பயங்கரமாக வேதனைப்பட்டேன். 22  நான் அறிவில்லாமல் இருந்துவிட்டேன், எதையும் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன்.உங்கள் முன்னால் புத்தியில்லாத மிருகம்போல் நடந்துகொண்டேன். 23  ஆனால், இப்போது நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.நீங்கள் என் வலது கையைப் பிடித்திருக்கிறீர்கள்.+ 24  உங்கள் அறிவுரைகளால் எனக்கு வழிகாட்டுகிறீர்கள்.+இனி நான் மேன்மை அடைவதற்கு வழிநடத்துவீர்கள்.+ 25  பரலோகத்தில் உங்களைத் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? இந்தப் பூமியில் உங்களைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.+ 26  என் உடலும் உள்ளமும் தளர்ந்துபோகலாம்.ஆனால், கடவுள் என்றென்றும் என் இதயத்தின் கற்பாறையாகவும்* என் பங்காகவும் இருக்கிறார்.+ 27  உங்களைவிட்டுத் தூரமாகப் போகிறவர்கள் அழிந்துபோவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கு* நீங்கள் முடிவுகட்டுவீர்கள்.+ 28  ஆனால், கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது.+ உன்னதப் பேரரசரான யெகோவாவிடம் நான் அடைக்கலம் புகுந்துவிட்டேன்.அவருடைய செயல்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அறிவிப்பேன்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பெருமையடிக்கிறவர்களை.”
வே.வா., “அவர்களுடைய வயிறு பெருத்திருக்கிறது.”
நே.மொ., “கொழுப்பால்.”
நே.மொ., “அவருடைய.”
வே.வா., “அவர்களை வெறுத்து ஒதுக்கிவிடுவீர்கள்.”
நே.மொ., “சிறுநீரகங்களுக்குள்.”
வே.வா., “இதயத்துக்குப் பலம் தருகிறவராகவும்.”
வே.வா., “ஒழுக்கக்கேடாக நடந்து உங்களைவிட்டு விலகுகிறவர்களுக்கு.”