சங்கீதம் 87:1-7

  • சீயோன், உண்மைக் கடவுளின் நகரம்

    • சீயோனில் பிறந்தவர்கள் (4-6)

கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம். ஒரு பாடல். 87  கடவுளுடைய நகரத்தின் அஸ்திவாரம் பரிசுத்த மலைகளில் போடப்பட்டிருக்கிறது.+   யாக்கோபின் கூடாரங்கள் எல்லாவற்றையும்விடசீயோனின் வாசல்களை யெகோவா அதிகமாக நேசிக்கிறார்.+   உண்மைக் கடவுளின் நகரமே, உன்னைப் பற்றி அருமையான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.+ (சேலா)   என்னைப் பற்றித் தெரிந்தவர்களின்* பட்டியலில்ராகாபையும்*+ பாபிலோனையும் சேர்த்துக்கொள்வேன். இதோ, பெலிஸ்தியாவையும் தீருவையும் கூஷையும்* சேர்ந்தவர்களைப் பற்றி, “இவர்கள் சீயோனில் பிறந்தார்கள்” என்று சொல்லப்படும்.   சீயோனைப் பற்றி, “இன்னார் இன்னார் இங்கே பிறந்தார்கள்” என்று சொல்லப்படும். உன்னதமான கடவுள் சீயோனை உறுதியாக நிலைநிறுத்துவார்.   மக்களுடைய பெயர்களைப் பதிவு செய்யும்போது, “இவர்கள் சீயோனில் பிறந்தார்கள்” என்று யெகோவா அறிவிப்பார். (சேலா)   “எல்லா ஆசீர்வாதங்களும் சீயோனிலிருந்துதான் வருகின்றன”*+ என்று பாடகர்களும்+ நடனம்* ஆடுகிறவர்களும்+ சொல்வார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “என்னை ஏற்றுக்கொண்டவர்களின்.”
அநேகமாக, “எகிப்தையும்.”
வே.வா., “எத்தியோப்பியாவையும்.”
நே.மொ., “என்னுடைய எல்லா நீரூற்றுகளும் உன்னிடத்தில் இருக்கின்றன.”
வே.வா., “வட்டமாக நடனம்.”