சங்கீதம் 99:1-9

  • யெகோவா, பரிசுத்தமான ராஜா

    • கேருபீன்களுக்கு மேலாக வீற்றிருக்கிறார் (1)

    • கடவுள் மன்னிக்கிறவர், தண்டிக்கிறவர் (8)

99  யெகோவா ராஜாவாகிவிட்டார்,+ மக்கள் நடுநடுங்கட்டும். கேருபீன்களுக்கு மேலாக* அவர் வீற்றிருக்கிறார்,+ பூமி அதிரட்டும்.   யெகோவா சீயோனிலே மகத்தானவராக இருக்கிறார்.எல்லா மக்களுக்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கிறார்.+   கடவுளே, உங்களுடைய மகத்தான பெயரை அவர்கள் புகழட்டும்.+ஏனென்றால், அது பயபக்திக்குரியது, பரிசுத்தமானது.   அவர் பலம்படைத்த ராஜா, நியாயத்தை நேசிக்கிறவர்.+ கடவுளே, நீங்கள் நேர்மையை நிலைநாட்டியிருக்கிறீர்கள். யாக்கோபின் வம்சத்தாருக்கு நீதியும் நியாயமும் செய்திருக்கிறீர்கள்.+   நம் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்.+அவருடைய கால்மணைக்கு முன்னால் மண்டிபோடுங்கள்.+ அவர் பரிசுத்தமானவர்.+   யெகோவா நியமித்த குருமார்களில் மோசேயும் ஆரோனும்,+அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டவர்களில் சாமுவேலும்,+ அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்தார்.+   மேகத் தூணிலிருந்து அவர்களிடம் பேசினார்.+ அவருடைய நினைப்பூட்டுதல்களையும் கட்டளைகளையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள்.+   எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் அவர்களுக்குப் பதில் கொடுத்தீர்கள்.+ நீங்கள் அவர்களை மன்னித்தீர்கள்.+அதேசமயத்தில், அவர்கள் பாவம் செய்தபோது தண்டித்தீர்கள்.+   நம் கடவுளாகிய யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்.+அவருடைய பரிசுத்த மலைக்கு முன்னால் தலைவணங்குங்கள்.*+ஏனென்றால், நம் கடவுளான யெகோவா பரிசுத்தமானவர்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “நடுவில்.”
வே.வா., “அவரை வணங்குங்கள்.”