நியாயாதிபதிகள் 5:1-31

  • தெபொராள் மற்றும் பாராக்கின் வெற்றிப் பாடல் (1-31)

    • சிசெராவுக்கு எதிராக நட்சத்திரங்கள் போர் செய்கின்றன (20)

    • கீசோன் நீரோடை பெருக்கெடுக்கிறது (21)

    • யெகோவாவை நேசிக்கிறவர்கள் சூரியனைப் போல் பிரகாசிக்கிறார்கள் (31)

5  அன்றைக்கு தெபொராள்+ பாட்டுப் பாடினாள். அவள் அபினோகாமின் மகன் பாராக்குடன்+ சேர்ந்து,   “இஸ்ரவேலர்கள் நேர்த்திக்கடன் செலுத்த* போனார்கள்.போர் செய்ய மனப்பூர்வமாகப் போனார்கள்.+அதனால், யெகோவாவைப் புகழுங்கள்!   ராஜாக்களே, கேளுங்கள்! அதிபதிகளே, கவனியுங்கள்! நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்குத்+ துதி பாடுவேன்.*+   யெகோவாவே, நீங்கள் சேயீர் மலையிலிருந்து+ புறப்பட்டீர்கள்.ஏதோம் பிரதேசத்திலிருந்து அணிவகுத்து வந்தீர்கள்.அப்போது பூமி குலுங்கியது, வானத்திலிருந்து மழை பொழிந்தது.மேகத்திலிருந்து தண்ணீர் கொட்டியது.   யெகோவாவுக்கு முன்னால் மலைகள் உருகின.*+இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ முன்னால் சீனாய் கரைந்தது.+   ஆனாத் மகன் சம்காரின்+ நாளிலே,யாகேல்+ வாழ்ந்த காலத்திலே,சாலைகள் வெறிச்சோடிக் கிடந்த சமயத்திலே,பயணிகள் சுற்றுப் பாதையில் பயணம் செய்தார்கள்.   இஸ்ரவேல் கிராமவாசிகள் இல்லாமல் போனார்கள்.கடைசியில் தெபொராளாகிய+ நான் வந்தேன்.இஸ்ரவேலின் தாயாக+ நான் வந்தேன்.   அவர்கள் புதிய தெய்வங்களைக் கும்பிட்டார்கள்.+அப்போது நகரவாசலில் போர் சத்தம் கேட்டது.+ இஸ்ரவேல் வீரர்கள் நாற்பதாயிரம் பேரின் கைகளில்,கேடயமும் இல்லை, ஈட்டியும் இல்லை.   அந்த வீரர்களோடு மனப்பூர்வமாகப் போன+ படைத் தளபதிகளுக்கு+நான் இதயப்பூர்வமான ஆதரவு கொடுக்கிறேன். யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! 10  பழுப்பு நிற கழுதைகளில் சவாரி செய்பவர்களே,உயர்தரமான கம்பளங்களில் உட்கார்ந்திருப்பவர்களே,வழியில் நடந்துபோகிறவர்களே,கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 11  மந்தைக்குத் தண்ணீர் காட்டுகிறவர்களின் சத்தம்தண்ணீர்த் தொட்டிகளின் பக்கத்தில் கேட்டது.யெகோவாவின் நீதியான செயல்களைப் பற்றியும், இஸ்ரவேல் கிராமத்து ஜனங்கள் செய்த நல்ல காரியங்களைப் பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். பின்பு, யெகோவாவின் ஜனங்கள் நகரவாசலுக்குப் போனார்கள். 12  விழித்தெழு! தெபொராளே,+ விழித்தெழு! விழித்தெழு! ஒரு பாடல் பாட+ விழித்தெழு! பாராக்கே, எழுந்திடு!+ அபினோகாமின் மகனே, உன் எதிரிகளைப் பிடித்துக்கொண்டு போ! 13  மீதியாக இருந்தவர்கள் முக்கியப் பிரமுகர்களிடம் வந்தார்கள்.பலசாலிகளை எதிர்க்க யெகோவாவின் ஜனங்கள் என்னைத் தேடி வந்தார்கள். 14  பள்ளத்தாக்கில் இருந்தவர்கள் எப்பிராயீமிலிருந்து வந்தார்கள்.பென்யமீனியர்களே, உங்களோடு அவர்களும் வந்தார்கள். மாகீரிலிருந்து+ படைத் தளபதிகள் வந்தார்கள்.போருக்கு ஆள் எடுக்கிறவர்கள்* செபுலோனிலிருந்து வந்தார்கள். 15  இசக்காரின் அதிகாரிகள் தெபொராளுடன் இருந்தார்கள்.இசக்காரைப் போலவே பாராக்கும்+ அவளுடன் போனார். அவர் சமவெளிக்கு நடந்தே போனார்.+ ரூபன் பிரிவினரின் இதயம் இரண்டுபட்டிருந்தது. 16  ஏன் இரண்டு மூட்டைகளைச் சுமந்துகொண்டு உட்கார்ந்தீர்கள்?மந்தைகளுக்காகக் குழல் ஊதுபவர்களின் இசையை ஏன் ரசித்துக்கொண்டு இருந்தீர்கள்?+ ரூபன் பிரிவினரின் இதயம் இரண்டுபட்டிருந்ததே. 17  யோர்தானுக்கு அந்தப் பக்கமே கீலேயாத் இருந்துவிட்டான்.+கப்பல்களின் நடுவிலேயே தாண் இருந்துவிட்டான்.+ கடற்கரையிலேயே ஆசேர் சோம்பலோடு உட்கார்ந்துவிட்டான்.துறைமுகங்களிலேயே அவன் தங்கிவிட்டான்.+ 18  செபுலோன் ஜனங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள்.நப்தலி ஜனங்களும்+ குன்றுகள்மேல்+ அதேபோல் செய்தார்கள். 19  ராஜாக்கள் வந்து போர் செய்தார்கள்.தானாக்கிலே, மெகிதோவின் தண்ணீருக்குப் பக்கத்திலே,+கானானின் ராஜாக்கள் சண்டை போட்டார்கள்.+ வெள்ளி எதையும் அவர்கள் சூறையாடவில்லை.+ 20  வானத்திலிருந்து நட்சத்திரங்கள் போர் செய்தன.அவற்றின் சுற்றுப் பாதைகளிலிருந்து சிசெராவுடன் சண்டை போட்டன. 21  கீசோன் நீரோடை எதிரிகளை அடித்துக்கொண்டு போனது.+அது பழங்காலத்து நீரோடை. பலம்படைத்தவர்களை நான் மிதித்துப் போட்டேன். 22  வீரியமுள்ள குதிரைகள்* மூர்க்கமாகப் பாய்ந்தோடின.அவற்றின் குளம்புகள் நிலத்தை அதிர வைத்தன.+ 23  யெகோவாவின் தூதர் சொன்னார்:‘மேரோசைச் சபியுங்கள், அதன் ஜனங்களைச் சபியுங்கள்.அவர்கள் யெகோவாவின் உதவிக்கு வரவில்லை.பலசாலிகளுடன் வந்து யெகோவாவுக்கு உதவி செய்யவில்லை.’ 24  யாகேல்,+ பெண்களில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்.அவள் கேனியரான ஹேபெரின்+ மனைவி.கூடாரங்களில் வாழ்கிற பெண்களில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள். 25  அவன் தண்ணீரைக் கேட்டான், அவள் பாலைக் கொடுத்தாள். கடைந்த பாலை* பெரிய கிண்ணத்தில் கொடுத்தாள்.+ 26  கூடார ஆணியைக் கையில் எடுத்தாள்.வலது கையால் சுத்தியலை ஓங்கினாள். சிசெராவின் நெற்றிப்பொட்டைத் துளைத்தாள்.+அவன் தலையை அடித்து நொறுக்கினாள். 27  அவன் அவளுடைய காலடியில் விழுந்தான்,அப்படியே அசையாமல் கிடந்தான்.அங்கேயே விழுந்து கிடந்தான்.விழுந்த இடத்திலேயே பிணமானான். 28  சிசெராவின் தாய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக்கொண்டே,‘அவனுடைய போர் ரதம் ஏன் இன்னும் வரவில்லை? குதிரைகள் ஓடிவரும் சத்தம் ஏன் இன்னும் கேட்கவில்லை?’+ என்று புலம்பினாள். 29  புத்திசாலியான பணிப்பெண்கள் அவளுக்குப் பதில் சொன்னார்கள்.அவளும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே, 30  ‘கைப்பற்றிய பொருள்களை அவர்கள் பங்குபோட்டுக்கொண்டு இருப்பார்கள்.ஒரு வீரனுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும்,சிசெராவுக்கு வண்ண வண்ணத் துணிகளையும்,கைப்பற்றியவர்களுடைய கழுத்தை அலங்கரிப்பதற்குதையல்* வேலைப்பாடு செய்த ஒரு உடையையும், வண்ணத் துணியையும்,தையல் வேலைப்பாடு செய்த இரண்டு உடைகளையும் கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்’ என்றாள். 31  யெகோவாவே, உங்கள் எதிரிகள் அழிந்துபோகட்டும்.+உங்களை நேசிக்கிறவர்கள் சூரியன்போல் பிரகாசமாக உதிக்கட்டும்” என்று பாடினாள்.+ அதன்பின், 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தலைமுடியை விரித்தபடி.” இது அவர்களுடைய நேர்த்திக்கடனுக்கு அடையாளமாக இருந்தது.
வே.வா., “இசை இசைப்பேன்.”
அல்லது, “அதிர்ந்தன.”
அல்லது, “எழுத்தர்களின் எழுதுகோலைப் பிடிக்கிறவர்கள்.”
வே.வா., “பொலிகுதிரைகள்.”
வே.வா., “பாலேடு நிறைந்த கெட்டிப் பாலை.”
வே.வா., “எம்பிராய்டரி.”