நீதிமொழிகள் 11:1-31

  • அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும் (2)

  • கடவுளைவிட்டு விலகியவன் அடுத்தவர்களைச் சீரழிக்கிறான் (9)

  • “ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி” (14)

  • தாராள குணமுள்ளவன் செழிப்பான் (25)

  • சொத்துப்பத்துகளை நம்புகிறவன் விழுந்துபோவான் (28)

11  கள்ளத் தராசுகளை யெகோவா அருவருக்கிறார்.ஆனால், சரியான எடைக்கற்களை அவர் விரும்புகிறார்.+   அகங்காரம்* வந்தால் அவமானம் பின்னாலேயே வரும்.+ஆனால், அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.+   நேர்மையானவர்களின் உத்தம குணம் அவர்களை வழிநடத்தும்.+ஆனால், துரோகிகளின் குறுக்குபுத்தி அவர்களை அழித்துவிடும்.+   கடும் கோபத்தின் நாளில் சொத்துப்பத்துகள் உதவாது.+ஆனால், நீதியே மரணத்திலிருந்து காப்பாற்றும்.+   குற்றமற்றவர்களுடைய நீதி அவர்களுடைய பாதையை நேராக்கும்.ஆனால், அக்கிரமக்காரர்கள் தங்களுடைய அக்கிரமத்தாலேயே விழுந்துபோவார்கள்.+   நேர்மையானவர்களுடைய நீதி அவர்களைக் காப்பாற்றும்.+ஆனால், துரோகிகள் தங்களுடைய ஆசைகளிலேயே சிக்கிக்கொள்வார்கள்.+   பொல்லாதவன் சாகும்போது அவனுடைய எதிர்பார்ப்பு அழிந்துபோகிறது.தன் பலத்தின் மேல் அவன் வைத்திருக்கிற நம்பிக்கையும் அழிந்துபோகிறது.+   நீதிமான் இக்கட்டிலிருந்து காப்பாற்றப்படுகிறான்.ஆனால், பொல்லாதவன் அந்த இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான்.+   கடவுளைவிட்டு விலகியவன்* தன் வாயால் அடுத்தவர்களைச் சீரழிக்கிறான்.ஆனால், நீதிமான்கள் தங்களுடைய அறிவால் தப்பித்துக்கொள்கிறார்கள்.+ 10  நீதிமான்களுடைய நல்ல குணத்தால் நகரமே சந்தோஷப்படுகிறது.ஆனால், பொல்லாதவர்கள் அழியும்போது ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.+ 11  நேர்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தால் நகரம் செழிக்கிறது.+ஆனால், பொல்லாதவர்களுடைய வாயினால் அது சின்னாபின்னமாகிறது.+ 12  புத்தியில்லாதவன் அடுத்தவர்களை அவமதிக்கிறான்.ஆனால், பகுத்தறிவு நிறைந்தவன் அமைதியாக இருக்கிறான்.+ 13  இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியத்தை அம்பலப்படுத்துகிறான்.+ஆனால், நம்பகமானவன் ரகசியத்தைக் காப்பாற்றுகிறான். 14  திறமையான வழிநடத்துதல் இல்லையென்றால் மக்கள் திண்டாடுவார்கள்.ஆனால், ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி* நிச்சயம்.+ 15  முன்பின் தெரியாதவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்கிறவன் கண்டிப்பாக அவதிப்படுவான்.+ஆனால், கைகுலுக்கி ஒப்பந்தம் செய்யாதவன் பாதுகாப்பாக இருப்பான். 16  கனிவான பெண் நல்ல பெயர் சம்பாதிக்கிறாள்.+ஆனால், ஈவிரக்கமில்லாத ஆட்கள் சொத்துகளை அபகரிக்கிறார்கள். 17  கருணையுள்ளவன்* தனக்கு நன்மை செய்துகொள்கிறான்.+ஆனால், கொடூரமானவன் தனக்குக் கஷ்டத்தை* தேடிக்கொள்கிறான்.+ 18  பொல்லாதவன் சம்பாதிக்கிற கூலியால் எந்தப் பலனும் கிடைக்காது.+ஆனால், நீதியை விதைக்கிறவன் நல்ல பலனை அறுப்பான்.+ 19  நீதியின் பக்கம் உறுதியாக நிற்கிறவன் வாழ்வு அடைவான்.+ஆனால், அக்கிரமம் செய்ய ஓடுகிறவன் மரணம் அடைவான். 20  கோணலான புத்தி* உள்ளவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.+ஆனால், குற்றமற்ற வழியில் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள்.+ 21  இது உறுதி: அக்கிரமக்காரன் தண்டனையிலிருந்து தப்பிக்க மாட்டான்.+ஆனால், நீதிமான்களின் பிள்ளைகள் தப்பித்துக்கொள்வார்கள். 22  புத்தியில்லாமல் நடக்கிற அழகான பெண்,பன்றியின் மூக்கில் இருக்கிற தங்க மூக்குத்திபோல் இருக்கிறாள். 23  நீதிமான்களின் விருப்பம் நன்மையைக் கொண்டுவரும்.+ஆனால், பொல்லாதவர்களின் நம்பிக்கை கடும் கோபத்தைக் கொண்டுவரும். 24  தாராளமாகக் கொடுக்கிறவன்* ஏராளமாகப் பெறுகிறான்.+கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டுகிறவன் ஏழையாகிறான்.+ 25  தாராள குணமுள்ளவன் செழிப்பான்.+மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்.*+ 26  தானியத்தைப் பதுக்கி வைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்.ஆனால், அதை விற்கிறவனைப் புகழ்வார்கள். 27  நல்லது செய்வதில் தீவிரமாக இருக்கிறவன் மற்றவருடைய பிரியத்தை* சம்பாதிக்கிறான்.+ஆனால், கெட்டது செய்வதில் குறியாக இருக்கிறவனுக்குக் கெட்டதுதான் நடக்கும்.+ 28  தன்னுடைய சொத்துப்பத்துகளை நம்புகிறவன் விழுந்துபோவான்.+ஆனால், நீதிமான்கள் இளந்தளிரைப் போலத் தழைப்பார்கள்.+ 29  தன் குடும்பத்துக்குத் துன்பத்தை* கொண்டுவருகிறவன் காற்றைத்தான் சொத்தாகப் பெறுவான்.+ஞானமுள்ளவனுக்கு முட்டாள் வேலைக்காரனாக இருப்பான். 30  நீதிமானின் செயல்கள் வாழ்வளிக்கும் மரத்தைப் போல் இருக்கின்றன.+மற்றவர்களை நல்ல வழிக்குக் கொண்டுவருகிறவன் ஞானமுள்ளவன்.+ 31  பூமியில் நீதிமானுக்கே கூலி கிடைக்கும் என்றால்,அக்கிரமக்காரனையும் பாவியையும் பற்றிச் சொல்லவே வேண்டாம்!+

அடிக்குறிப்புகள்

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “விசுவாசதுரோகி.”
வே.வா., “மீட்பு.”
வே.வா., “அவமானத்தை.”
வே.வா., “மாறாத அன்பு காட்டுகிறவன்.”
நே.மொ., “இதயம்.”
நே.மொ., “வாரி இறைக்கிறவன்.”
வே.வா., “தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சுகிறவனுக்குத் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”
கடவுளுடைய பிரியத்தையோ மனிதர்களுடைய பிரியத்தையோ குறிக்கலாம்.
வே.வா., “அவமானத்தை.”