நீதிமொழிகள் 19:1-29

  • விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும் (11)

  • சண்டைக்கார மனைவி ஒழுகுகிற கூரை போன்றவள் (13)

  • விவேகமுள்ள மனைவி யெகோவா தருகிற சொத்து (14)

  • நம்பிக்கை இருக்கும்போதே பிள்ளையைக் கண்டித்துத் திருத்து (18)

  • ஆலோசனையைக் கேட்பதுதான் ஞானம் (20)

19  முட்டாளாக இருந்துகொண்டு பொய் பேசுவதைவிட,ஏழையாக இருந்துகொண்டு உத்தமமாக நடப்பதே மேல்.+   ஒருவன் அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.+யோசிக்காமல் நடந்துகொள்கிறவன் பாவம் செய்கிறான்.   மனிதனுடைய முட்டாள்தனம் அவன் வழியைத் தாறுமாறாக்குகிறது.ஆனால், அவனுடைய உள்ளம் யெகோவாவுக்கு எதிராகக் கொதிப்படைகிறது.   பணக்காரனுக்குப் பல நண்பர்கள் கிடைக்கிறார்கள்.ஆனால், ஏழையை அவனுடைய நண்பன்கூட கைவிட்டுவிடுவான்.+   பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.+மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் தப்பிக்கவே மாட்டான்.+   பெரிய மனிதனின்* தயவைத் தேடி பல பேர் வருவார்கள்.அன்பளிப்புகள் கொடுப்பவனுக்கு எல்லாரும் நண்பர்களாக இருப்பார்கள்.   ஏழையை அவனுடைய சகோதரர்களே வெறுக்கும்போது,+அவனுடைய நண்பர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?+ அவன் கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தாலும், அவர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.   நல்ல புத்தியைச் சம்பாதிப்பவன் தன்னை நேசிக்கிறான்.+ பகுத்தறிவைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பவன் வெற்றி* பெறுவான்.+   பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் அழிந்துபோவான்.+ 10  ஆடம்பரமாக வாழ்வது முட்டாளுக்குப் பொருந்தாதபோது,இளவரசர்களை ஆட்சி செய்வது வேலைக்காரனுக்குக் கொஞ்சமாவது பொருந்துமா?+ 11  விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும்.+தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை* மன்னிப்பது அவனுக்கு அழகு.+ 12  ராஜாவின் கோபம் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருக்கிறது.+ஆனால் அவருடைய கருணை, புல்லின் மேலுள்ள பனித்துளிபோல் இருக்கிறது. 13  புத்தியில்லாத மகன் தன்னுடைய அப்பாவுக்குப் பெரும் தொல்லையைக் கொண்டுவருகிறான்.+சண்டைக்கார* மனைவி ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரையைப் போல் இருக்கிறாள்.+ 14  வீடும் செல்வமும் அப்பா கொடுக்கிற சொத்து.ஆனால், விவேகமுள்ள மனைவி யெகோவா தருகிற சொத்து.+ 15  சோம்பேறி தூங்கிக்கொண்டே இருப்பான்.மந்தமானவன் பசியில் கிடப்பான்.+ 16  கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.+தன் வழிகளில் கவனமாக இல்லாதவன் உயிரைத் தொலைத்துவிடுவான்.+ 17  ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+ 18  திருந்துவான் என்ற நம்பிக்கை இருக்கும்போதே உன் மகனைக் கண்டித்துத் திருத்து.+அவனுடைய சாவுக்கு நீ காரணமாகிவிடாதே.+ 19  எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவன் அதற்கான தண்டனையைப் பெறுவான்.அவனைக் காப்பாற்ற நீ முயற்சி செய்தால், திரும்பத் திரும்ப அதைச் செய்ய வேண்டியிருக்கும்.+ 20  ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.+அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்.+ 21  மனிதன் தன் உள்ளத்தில் நிறைய திட்டங்களைப் போடலாம்.ஆனால், கடைசியில் யெகோவா நினைப்பதுதான்* நடக்கும்.+ 22  மாறாத அன்பு காட்டுவதுதான் மனிதனுக்கு அழகு.+பொய்யனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல். 23  யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் வாழ்வு பெறுவான்.+அவன் எந்த ஆபத்தும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவான்.+ 24  சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+ 25  கேலி செய்கிறவனை அடி,+ அப்போதுதான் அனுபவமில்லாதவன் சாமர்த்தியசாலி ஆவான்.+புத்தி* உள்ளவனைக் கண்டி, அப்போதுதான் அவனுக்கு இன்னும் அறிவு வளரும்.+ 26  அப்பாவைக் கொடுமைப்படுத்தி, அம்மாவை விரட்டியடிக்கிற மகன்,அவமானத்தையும் தலைகுனிவையும் உண்டாக்குகிறான்.+ 27  என் மகனே, புத்திமதி கேட்பதை நீ விட்டுவிட்டால்,அறிவு புகட்டுகிற வார்த்தைகளைவிட்டு விலகிவிடுவாய். 28  உதவாக்கரையான சாட்சி நியாயத்தைக் கேலி செய்கிறான்.+பொல்லாத மனிதன் அக்கிரமத்தை ஆசையோடு விழுங்குகிறான்.+ 29  கேலி செய்கிறவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு காத்திருக்கிறது.+முட்டாள்களின் முதுகுக்குப் பிரம்படி காத்திருக்கிறது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தாராள குணமுள்ளவனின்.”
நே.மொ., “நன்மையை.”
வே.வா., “தனக்கு எதிரான குற்றத்தை.”
வே.வா., “நச்சரிக்கிற.”
வே.வா., “அவர் அவனுக்குப் பலன் கொடுப்பார்.”
வே.வா., “யெகோவாவின் நோக்கம்தான்; ஆலோசனைதான்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”