நீதிமொழிகள் 24:1-34

  • அக்கிரமக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே (1)

  • வீடு ஞானத்தால் கட்டப்படும் (3)

  • நீதிமான் விழுந்தாலும் எழுந்து நிற்பான் (16)

  • பழிக்குப் பழி வாங்காதே (29)

  • தூங்கிக்கொண்டே இருந்தால் வறுமைதான் வரும் (33, 34)

24  அக்கிரமக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே.அவர்களோடு பழகுவதற்கு ஏங்காதே.+   ஏனென்றால், அவர்களுடைய உள்ளம் வன்முறையைப் பற்றியே யோசிக்கிறது.அவர்களுடைய உதடுகள் தீமையைப் பற்றியே பேசுகின்றன.   வீடு* ஞானத்தால் கட்டப்படும்.+பகுத்தறிவால் அது நிலைநிறுத்தப்படும்.   அறிவால் அதன் அறைகள் நிரப்பப்படும்.எல்லாவித அருமையான பொக்கிஷங்களும் அவற்றில் குவித்து வைக்கப்படும்.+   ஞானமுள்ளவன் பலமுள்ளவன்.+ஒருவன் தன் அறிவினால் அதிக பலம் அடைகிறான்.   திறமையான வழிநடத்துதல் இருந்தால் நீ போர் செய்ய முடியும்.+ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+   உண்மையான ஞானம் முட்டாளுக்கு எட்டவே எட்டாது.+நகரவாசலில் சொல்வதற்கு அவனிடம் எதுவும் இருக்காது.   சதித்திட்டம் தீட்டுகிறவன்மோசடி மன்னன் என்று அழைக்கப்படுவான்.+   முட்டாள்தனமான திட்டங்கள்* பாவம் நிறைந்தவை.கேலி செய்கிறவனை மக்கள் அருவருக்கிறார்கள்.+ 10  இக்கட்டில்* தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால்,உன் பலம் குறைந்துவிடும். 11  சாகடிப்பதற்காகக் கொண்டுபோகப்படுகிற ஆட்களைக் காப்பாற்று.கொல்லப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிறவர்களை விடுவி.+ 12  “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம். ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+ உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+ 13  என் மகனே, தேனைச் சாப்பிடு; அது நல்லது.தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாக இருக்கும். 14  அதேபோல், ஞானம் உனக்கு நல்லது என்பதைத் தெரிந்துகொள்.+ அதை நீ தேடிக் கண்டுபிடித்தால், உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.உன் நம்பிக்கை வீண்போகாது.+ 15  நீதிமானின் வீட்டுக்குப் பக்கத்தில் கெட்ட எண்ணத்தோடு பதுங்கியிருக்காதே.அவன் குடியிருக்கும் இடத்தை அழிக்காதே. 16  நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்.+ஆனால், பொல்லாதவன் பேராபத்தில் சிக்கி விழுந்துபோவது உறுதி.+ 17  உன் எதிரி விழுந்தால் கைகொட்டிச் சிரிக்காதே.அவனுக்கு அடிசறுக்கினால் உன் உள்ளத்தில் சந்தோஷப்படாதே.+ 18  அப்படிச் செய்தால், யெகோவா அதைப் பார்த்து உன்மேல் வருத்தப்படுவார்.அவன்மேல்* இருந்த கோபம் அவருக்குப் போய்விடும்.+ 19  அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சல் அடையாதே.பொல்லாதவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே. 20  அக்கிரமம் செய்கிறவனுக்கு எதிர்காலமே இல்லை.+பொல்லாதவனின் விளக்கு அணைக்கப்படும்.+ 21  என் மகனே, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயப்படு.+ எதிர்ப்பு காட்டுகிறவர்களோடு* சேராதே.+ 22  அவர்களுக்குத் திடீரென்று அழிவு வரும்.+ கடவுளும் ராஜாவும் அவர்களை எப்படித் தண்டிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?+ 23  இவையும் ஞானமுள்ளவர்கள் கொடுத்த ஆலோசனைகள்: தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+ 24  குற்றவாளியைப் பார்த்து, “நீ நிரபராதி” என்று சொல்கிறவனை+ ஜனங்கள் சபிப்பார்கள், தேசங்கள் கண்டனம் செய்யும். 25  ஆனால், அவனைக் கண்டிக்கிறவர்களுக்கு நல்லது நடக்கும்.+அவர்களுக்கு அருமையான ஆசீர்வாதங்கள் வந்து சேரும்.+ 26  நேர்மையாகப் பதில் சொல்கிறவனுக்கு மக்கள் முத்தம் கொடுப்பார்கள்.*+ 27  உன் வெளிவேலையைத் திட்டமிடு, வயலில் செய்ய வேண்டியதைச் செய்துவிடு,அதன் பிறகு உன் வீட்டை* கட்டு. 28  எந்த ஆதாரமும் இல்லாமல் அடுத்தவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லாதே.+ உன் வாயால் மற்றவர்களை ஏமாற்றாதே.+ 29  “அவன் எனக்குச் செய்த மாதிரியே நானும் செய்வேன்;பழிக்குப்பழி வாங்குவேன்” என்று சொல்லாதே.+ 30  சோம்பேறியின்+ வயல் வழியாக நான் போனேன்.புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டம் பக்கமாகப் போனேன். 31  அங்கே களைகள் மண்டிக் கிடந்தன.முட்செடிகள் நிலத்தை மூடியிருந்தன,கற்சுவரும் உடைந்து கிடந்தது.+ 32  அதைப் பார்த்தபோது எனக்குக் கஷ்டமாகிவிட்டது.அதையெல்லாம் பார்த்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன்: 33  “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால், 34  வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “குடும்பம்.”
வே.வா., “முட்டாளின் திட்டங்கள்.”
வே.வா., “வேதனையில்.”
வே.வா., “உள்ளெண்ணங்களை.”
அதாவது, “எதிரிமேல்.”
வே.வா., “கலகக்காரர்களோடு.”
அல்லது, “நேரடியாகப் பதில் சொல்வது முத்தம் கொடுப்பதுபோல் இருக்கிறது.”
வே.வா., “குடும்பத்தை.”