நீதிமொழிகள் 4:1-27

  • அப்பாவின் ஞானமான அறிவுரைகள் (1-27)

    • எல்லாவற்றையும்விட ஞானத்தைச் சம்பாதி (7)

    • பொல்லாதவர்களின் பாதைகளை வெறுத்துவிடு (14, 15)

    • நீதிமான்களின் பாதை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது (18)

    • “உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்” (23)

4  என் மகன்களே, அப்பா சொல்கிற புத்திமதியைக் கேளுங்கள்.+புத்தியை* அடைவதற்குக் கவனம் செலுத்துங்கள்.   ஏனென்றால், நான் உங்களுக்கு நல்ல அறிவுரைகளைத் தருவேன்.என் போதனையை* ஒதுக்கித்தள்ளாதீர்கள்.+   என் அப்பாவுக்கு நான் நல்ல பிள்ளையாக இருந்தேன்.+என் அம்மாவுக்குச் செல்லப் பிள்ளையாக இருந்தேன்.+   என் அப்பா எனக்கு இப்படிப் போதித்தார்: “என் வார்த்தைகளை எப்போதும் உன் இதயத்தில் வைத்துக்கொள்.+ என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது நீண்ட காலம் வாழ்வாய்.+   ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும்* சம்பாதி.+ நான் சொல்வதை மறந்துவிடாதே, அதை விட்டுவிலகாதே.   ஞானத்தை ஒதுக்கித்தள்ளாதே, அது உன்னைப் பாதுகாக்கும். அதை நேசி, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.   எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்,+ அதனால் ஞானத்தைச் சம்பாதி.எதைச் சம்பாதித்தாலும் புத்தியை* சம்பாதிக்க மறந்துவிடாதே.+   அதை உயர்வாக மதித்தால், அது உன்னை உயர்த்தும்.+ அதை விரும்பி ஏற்றுக்கொண்டால், அது உனக்கு மதிப்புச் சேர்க்கும்.+   அது உன் தலையில் அலங்காரக் கிரீடத்தைச் சூட்டும்.அழகிய கிரீடத்தால் உன்னை அலங்கரிக்கும்.” 10  என் மகனே, என் ஆலோசனைகளைக் கேள், அவற்றை ஏற்றுக்கொள்.அப்போது, நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்.+ 11  ஞானமான வழியை நான் உனக்குச் சொல்லிக்கொடுப்பேன்.+நேர்மையான பாதையில் உன்னைக் கூட்டிக்கொண்டு போவேன்.+ 12  நடக்கும்போது நீ தடுமாற மாட்டாய்.ஓடினாலும் தடுக்கி விழ மாட்டாய். 13  புத்திமதிகளை உறுதியாகப் பிடித்துக்கொள், அவற்றை விட்டுவிடாதே.+ அவற்றைப் பாதுகாத்துக்கொள், அவை உனக்கு வாழ்வு தரும்.+ 14  பொல்லாதவர்களின் பாதையில் போகாதே.அக்கிரமக்காரர்களின் வழியில் நடக்காதே.+ 15  அதை வெறுத்துவிடு, அந்தப் பக்கமே தலைகாட்டாதே.+அதைவிட்டு விலகு, அங்கிருந்து வந்துவிடு.+ 16  அக்கிரமம் செய்யாவிட்டால் அவர்களுக்குத் தூக்கமே வராது. யாருக்காவது குழி பறிக்கும்வரை அவர்களால் தூங்கவே முடியாது. 17  அவர்கள் அக்கிரமத்தின் உணவைச் சாப்பிடுகிறார்கள்.வன்முறையின் திராட்சமதுவைக் குடிக்கிறார்கள். 18  ஆனால், நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறவிடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது.+ 19  பொல்லாதவர்களின் பாதையோ இருள்போல் இருக்கிறது.எது தங்களைத் தடுக்கி விழ வைக்கிறது என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை. 20  என் மகனே, என் வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்.என் ஆலோசனைகளைக் கவனமாகக் கேள். 21  அவற்றை எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள்.உன் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்.+ 22  அவற்றைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவை வாழ்வு தரும்.+அவர்களுடைய முழு உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். 23  எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்.+ஏனென்றால், உன் உயிர் அதைச் சார்ந்தே இருக்கிறது.* 24  பொய் புரட்டை நீ தவிர்த்துவிடு.+நேர்மையற்ற பேச்சை உனக்குத் தூரமாக்கிவிடு. 25  உன்னுடைய கண்கள் நேராகப் பார்க்க வேண்டும்.அங்கும் இங்கும் பார்க்காமல் நேராகவே பார்க்க வேண்டும்.+ 26  உன் பாதையில் இருக்கிற தடைகளையெல்லாம் எடுத்துப்போடு.*+அப்போது, உன் வழிகளெல்லாம் உறுதியாகும். 27  வலது பக்கமோ இடது பக்கமோ சாயாதே.+கெட்ட வழியில் கால்வைக்காதே.

அடிக்குறிப்புகள்

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”
வே.வா., “சட்டத்தை.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலையும்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”
வே.வா., “உயிரின் ஊற்று அதிலிருந்தே புறப்படுகிறது.”
அல்லது, “உன் பாதையைப் பற்றிக் கவனமாக யோசி.”