நீதிமொழிகள் 9:1-18

  • ஞானம் அழைக்கிறது (1-12)

    • “என்னால் நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்” (11)

  • புத்தியில்லாத பெண் கூப்பிடுகிறாள் (13-18)

    • “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்” (17)

9  உண்மையான ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டியிருக்கிறது.அதற்கு ஏழு தூண்களைச் செய்து வைத்திருக்கிறது.   அது இறைச்சியை நன்றாகச் சமைத்து வைத்திருக்கிறது.*திராட்சமதுவைக் கலந்து வைத்திருக்கிறது.பந்தியைத் தயார் செய்திருக்கிறது.   அது தன் பணிப்பெண்களை அனுப்பி வைத்திருக்கிறது.அந்தப் பெண்கள் நகரத்தின் உயரமான இடங்களில் நின்றுகொண்டு,+   “அனுபவமில்லாதவர்களே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கும்படி செய்திருக்கிறது. அது புத்தியில்லாதவர்களைப் பார்த்து,   “வாருங்கள், நான் தரும் உணவைச் சாப்பிடுங்கள்.நான் கலந்து வைத்திருக்கும் திராட்சமதுவைக் குடியுங்கள்.   நீங்கள் அனுபவமில்லாமல் இருந்தது போதும்!+இனி புத்தியின்* பாதையில் முன்னேறிச் செல்லுங்கள்.+ அப்போது வாழ்வீர்கள்” என்று சொல்கிறது.   கேலி செய்கிறவனைத் திருத்தப் பார்க்கிறவன் அவமானத்தைத் தேடிக்கொள்கிறான்.+ கெட்டவனைக் கண்டிக்கிறவன் தன்னைப் புண்படுத்திக்கொள்வான்.   கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+ ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+   ஞானமுள்ளவனுக்கு உபதேசம் பண்ணு, அவன் இன்னும் ஞானமாக நடப்பான்.+ நீதிமானுக்குக் கற்றுக்கொடு, அவன் இன்னும் அறிவாளியாக ஆவான். 10  யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி.+மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான்+ புத்தியை* பெறுவதற்கு வழி. 11  என்னால் நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்.+உன் ஆயுள்காலம் கூட்டப்படும். 12  நீ ஞானமாக நடந்துகொண்டால் உனக்குத்தான் நல்லது.ஆனால், நீ கேலி செய்துகொண்டிருந்தால், நீயே அதன் விளைவை அனுபவிப்பாய். 13  புத்தியில்லாத பெண் வாயடிக்கிறாள்.+ அவளுக்கு அறிவில்லை, எதுவுமே தெரிவதில்லை. 14  நகரத்தின் உயரமான இடத்திலே,தன் வீட்டு வாசலில் அவள் உட்கார்ந்திருக்கிறாள்.+ 15  தெருவில் போகிறவர்களைக் கூப்பிடுகிறாள்.நேராகத் தங்கள் வழியில் போகிற அந்த ஆட்களைப் பார்த்து, 16  “அனுபவமில்லாதவர்களே, உள்ளே வாருங்கள்” என்று கூப்பிடுகிறாள். புத்தியில்லாதவர்களைப் பார்த்து,+ 17  “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்.திருட்டுத்தனமாகச் சாப்பிடுகிற உணவு ருசியாக இருக்கும்”+ என்று சொல்கிறாள். 18  ஆனால், அவளுடைய வீடு பிணங்களால்* நிறைந்திருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.அவளுடைய விருந்தாளிகள் ஆழமான கல்லறையில் கிடக்கிறார்கள்+ என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “வெட்டி வைத்திருக்கிறது.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலின்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களால்.”