மீகா 1:1-16

  • சமாரியாவுக்கும் யூதாவுக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு (1-16)

    • ஜனங்களுடைய பாவங்களும் குற்றங்களும்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் (5)

1  யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகிய ராஜாக்கள்+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில், மொரேசாவைச் சேர்ந்த மீகாவுக்கு* சமாரியாவையும் எருசலேமையும் பற்றி யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.+ அதில் அவர்,   “ஜனங்களே, கேளுங்கள்! பூமியே, அதில் உள்ளவையே, கவனித்துக் கேளுங்கள்!உன்னதப் பேரரசராகிய யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைக்+ கேளுங்கள்!பரிசுத்த ஆலயத்தில் இருக்கிற யெகோவா சொல்வதைக் கவனியுங்கள்!   இதோ! யெகோவா தன்னுடைய இடத்திலிருந்து வருகிறார்.அவர் கீழே வந்து, பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.   நெருப்பு பட்ட மெழுகு போலவும்,செங்குத்தான பாறையிலிருந்து கொட்டும் தண்ணீர் போலவும்,அவருடைய காலடியில் மலைகள் உருகியோடும்,+பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.   எல்லாவற்றுக்கும் காரணம் யாக்கோபு செய்த குற்றங்கள்தான்,இஸ்ரவேல் ஜனங்கள்* செய்த பாவங்கள்தான்.+ யாக்கோபின் குற்றங்களுக்கு யார் பொறுப்பு? சமாரியா ஜனங்கள்தானே?+ யூதாவில் இருக்கிற ஆராதனை மேடுகளுக்கு யார் பொறுப்பு?+ எருசலேம் ஜனங்கள்தானே?   நான் சமாரியாவைக் கல்லும் மண்ணும் கிடக்கிற இடமாகவும்,திராட்சைக் கொடிகளை நடுகிற இடமாகவும் ஆக்குவேன்.அவளுடைய கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,அவளுடைய அஸ்திவாரங்கள் வெளியே தெரியும்படி செய்வேன்.   அவள் வணங்குகிற சிலைகளைச் சுக்குநூறாக்குவேன்.+அவள் கும்பிடுகிற உருவங்களை உடைத்தெறிவேன். தன் உடலை விற்று அவள் வாங்கிக்கொண்ட எல்லாவற்றையும் எரித்துவிடுவேன்.+ விபச்சாரத்துக்குக் கூலியாக அவள் பெற்றுக்கொண்ட எல்லாமேமறுபடியும் விபச்சாரிகளுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்” என்று சொன்னார்.   இதனால், நான் சத்தமாக அழுது புலம்புவேன்.+காலில் செருப்பு இல்லாமலும் உடம்பில் துணி இல்லாமலும் நடப்பேன்.+ நரியைப் போல ஊளையிடுவேன்.நெருப்புக்கோழியைப் போல அலறுவேன்.   அவளுடைய காயம் ஆறாது.+அது யூதா வரைக்கும் பரவியிருக்கிறது.+ அழிவு என் ஜனங்களுடைய நுழைவாசலுக்கு வந்துவிட்டது, எருசலேமை எட்டிவிட்டது.+ 10  “காத் நகரத்தில் இதை அறிவிப்பு செய்யாதீர்கள்.ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாதீர்கள். பெத்-அப்ராவின் மண்ணில் புரளுங்கள். 11  சாப்பீர் ஜனங்களே, வெற்று உடம்போடும் வெட்கத்தோடும் புறப்பட்டுப் போங்கள். சாயனான் ஜனங்கள் வெளியில் தலைகாட்டாமல் இருக்கிறார்கள். பெத்-ஏசேலில் ஒப்பாரிச் சத்தம் கேட்கும்; இனி அங்கே உங்களுக்கு உதவி கிடைக்காது. 12  நல்லது வருமென்று மாரோத் ஜனங்கள் காத்திருந்தார்கள்.ஆனால், எருசலேமின் நுழைவாசலுக்கு யெகோவாவிடமிருந்து கெடுதல்தான் வந்திருக்கிறது. 13  லாகீஸ் ஜனங்களே,+ குதிரைகளை ரதத்தில் பூட்டுங்கள். சீயோன் மகள் பாவம் செய்ய ஆரம்பித்தது உங்களால்தான்.இஸ்ரவேலர்கள் பல குற்றங்கள் செய்தது உங்கள் ஊரில்தான்.+ 14  அதனால், மொரேசா-காத்துக்கு அன்பளிப்புகள் கொடுத்து வழியனுப்புவீர்கள். இஸ்ரவேலின் ராஜாக்கள் அக்சீப்பின்+ வீடுகளை நம்பி ஏமாந்துபோனார்கள். 15  மரேஷா+ ஜனங்களே, ஒரு வெற்றிவீரரை நான் உங்களிடம் அனுப்புவேன்.+ இஸ்ரவேலின் மகிமையாக இருக்கிறவர் அதுல்லாம் நகரம்வரை+ வருவார்.* 16  உங்கள் அருமைப் பிள்ளைகள் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்களே!+ அந்தத் துக்கத்தில் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் தலையைக் கழுகின் தலையைப் போல மொட்டை அடித்துக்கொள்ளுங்கள்.”

அடிக்குறிப்புகள்

மீகா என்பது மிகாவேல் அல்லது மிகாயா என்பதன் சுருக்கம். இதன் அர்த்தம், “யெகோவாவைப் போன்றவர் யார்?”
வே.வா., “வீட்டார்.”
நே.மொ., “இஸ்ரவேலின் மகிமை அதுல்லாம் நகரம்வரை வரும்.”