மீகா 4:1-13

  • யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை உயர்த்தப்படும் (1-5)

    • வாள்கள் மண்வெட்டிகளாக மாற்றப்படும் (3)

    • ‘நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில் நடப்போம்’ (5)

  • சீயோன் தேசம் திரும்பவும் பலப்படுத்தப்படும் (6-13)

4  கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை+ எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.பலதரப்பட்ட ஜனங்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+   பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+ அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள். ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.   பலதரப்பட்ட ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.+தூரத்தில் இருக்கிற பெரிய ஜனக்கூட்டங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார். அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+ ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+   ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள்.*+அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.+பரலோகப் படைகளின் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.   எல்லா ஜனங்களும் அவரவர் தெய்வத்தின் வழியில்* நடப்பார்கள்.ஆனால் நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில்* என்றென்றும் நடப்போம்.+   யெகோவா சொல்வது இதுதான்:“நொண்டி நொண்டி நடந்தவர்களை அந்த நாளில் ஒன்றுகூட்டுவேன்.துரத்தப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.+நான் தண்டித்த ஜனங்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.   நொண்டி நொண்டி நடந்தவர்களை மிச்சம் வைப்பேன்.+தூரமாய்த் துரத்தப்பட்டவர்களைப் பலம்படைத்த தேசமாக்குவேன்.+சீயோன் மலையில் யெகோவா அவர்களை ஆட்சி செய்வார்.அன்றுமுதல் என்றென்றும் அவர் ராஜாவாக இருப்பார்.   மந்தைகளைக் காக்கும் கோபுரமே,சீயோன்+ மகளுடைய மலையே,ஆரம்பத்திலிருந்த ஆட்சி உன் கைக்கு வந்துசேரும்.+அது எருசலேம் மகளிடமே திரும்பும்.+   இப்போது ஏன் கூச்சல் போடுகிறாய்? உன்னை ஆள ராஜா இல்லையா?அல்லது உனக்கு ஆலோசனை சொல்பவன் அழிந்துவிட்டானா?அதனால்தான் பிரசவ வலியில் துடிக்கிறவளைப் போலத் துடிக்கிறாயா?+ 10  சீயோன் மகளே, புழுவாய்த் துடி.பிரசவ வேதனைப்படுகிறவளைப் போல் வலியில் கதறு.இனி நீ உன் நகரத்தை விட்டுவிட்டு காட்டில் போய்க் குடியிருப்பாய். பாபிலோன்வரை போவாய்.+அங்கே காப்பாற்றப்படுவாய்.+அங்கு எதிரிகளின் கையிலிருந்து யெகோவா உன்னை மீட்பார்.+ 11  பல தேசங்களைச் சேர்ந்தவர்கள் உனக்கு விரோதமாக ஒன்றுகூடுவார்கள்.உன்னைப் பார்த்து, ‘சீயோன் சீரழிந்து போகட்டும்,அவளுக்கு வரும் கதியை நாம் கண்குளிரப் பார்க்கலாம்’ என்று சொல்வார்கள். 12  ஆனால், யெகோவா என்ன யோசிக்கிறார் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.அவர் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று* அவர்களுக்குப் புரிவதில்லை.புதிதாக அறுக்கப்பட்ட கதிர்கள் போல அவர்களைக் களத்துமேட்டில் சேர்க்கப்போகிறார். 13  சீயோனின் மகளே, எழுந்து போய்க் கதிர்களைப் போரடி.+உன் தலையிலுள்ள கொம்புகளை நான் இரும்பாக்குவேன்.உன் காலிலுள்ள குளம்புகளைச் செம்பாக்குவேன்.ஜனங்கள் பலரை நீ மிதித்து நொறுக்குவாய்.+அவர்கள் அநியாயமாகச் சம்பாதித்ததை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பாய். அவர்களுடைய சொத்துகளைப் பூமியின் சொந்தக்காரரிடம் ஒப்படைப்பாய்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவுரையும்.”
வே.வா., “குடியிருப்பார்கள்.”
நே.மொ., “பெயரில்.”
நே.மொ., “பெயரில்.”
வே.வா., “அவருடைய நோக்கம்.”