மீகா 6:1-16

  • இஸ்ரவேலோடு யெகோவாவுக்கு இருக்கும் வழக்கு (1-5)

  • யெகோவா என்ன கேட்கிறார்? (6-8)

    • நியாயம், உண்மைத்தன்மை, அடக்கம் (8)

  • இஸ்ரவேல் செய்த குற்றமும் அதற்கான தண்டனையும் (9-16)

6  யெகோவா பேசுவதைத் தயவுசெய்து கேளுங்கள். எழுந்து போய், மலைகளிடம் உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்.குன்றுகளும் அதைக் கேட்கட்டும்.+   மலைகளே, யெகோவாவின் வழக்கைக் கேளுங்கள்.பூமியின் உறுதியான அஸ்திவாரங்களே, நீங்களும் கவனியுங்கள்.+யெகோவாவுக்கு அவருடைய ஜனங்களோடு ஒரு வழக்கு இருக்கிறது.இஸ்ரவேலர்களோடு அவர் வாதாடப்போகிறார்:+   “என் ஜனங்களே, நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? எந்த விதத்தில் உங்களுக்குச் சலிப்பு உண்டாக்கினேன்?+ ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.   நான்தான் உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+நீங்கள் அடிமைப்பட்டிருந்த தேசத்திலிருந்து உங்களை விடுவித்தேன்.+மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் உங்கள்முன் அனுப்பினேன்.+   என் ஜனங்களே, மோவாபின் ராஜா பாலாக் போட்ட திட்டத்தைத்+ தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.அவனுக்கு பெயோரின் மகன் பிலேயாம் சொன்ன பதிலை+ யோசித்துப் பாருங்கள்.சித்தீமிலிருந்து+ கில்கால்வரை+ நடந்ததையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்.யெகோவா செய்ததெல்லாம் நீதியானது என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்.”   யெகோவாவுக்காக நான் எதைக் கொண்டுவருவேன்? பரலோகத்தின் கடவுளை வணங்க எதை எடுத்துவருவேன்? தகன பலிகளைக் கொண்டுவர வேண்டுமா?ஒருவயதுள்ள கன்றுக்குட்டிகளை எடுத்துவர வேண்டுமா?+   ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவாரா?ஆறுகளாய் ஓடும் எண்ணெயை விரும்புவாரா?+ நான் செய்த தவறுக்காக என்னுடைய மூத்த மகனைத் தர வேண்டுமா?நான் செய்த பாவத்துக்காக என் பிள்ளையைக் கொடுக்க வேண்டுமா?+   மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?* நியாயத்தைக் கடைப்பிடித்து,+ உண்மைத்தன்மையை* நெஞ்சார நேசித்து,+அடக்கத்தோடு+ உன் கடவுளுடைய வழியில்* நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!+   யெகோவாவின் குரல் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது.ஞானம்* உள்ளவர்கள் அவருடைய* பெயருக்குப் பயந்து நடப்பார்கள். பிரம்படியின் சத்தத்தைக் கேளுங்கள், அதைக் கொடுக்கச் சொன்னவருக்குக் கவனம் செலுத்துங்கள்.+ 10  அநியாயமாகச் சம்பாதித்த பொருள்கள் அக்கிரமக்காரனின் வீட்டில் இன்னும் இருக்கிறதா?அருவருப்பான போலி எடைக்கற்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? 11  கள்ளத்தராசுகளை வைத்துக்கொண்டு நான் நல்லவனாக இருக்க முடியுமா?போலி எடைக்கற்களை வைத்துக்கொண்டு நேர்மையானவனாக இருக்க முடியுமா?+ 12  நகரத்திலுள்ள பணக்காரர்கள் எதற்கெடுத்தாலும் வன்முறையில் இறங்குகிறார்கள்.அங்கு குடியிருக்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள்.+அவர்கள் வாயிலிருந்து உண்மையே வருவதில்லை.+ 13  “அதனால் நான் உங்களை அடித்துக் காயப்படுத்துவேன்.+பாவம் செய்ததால் நீங்கள் பாழாய்ப் போவீர்கள். 14  நீங்கள் சாப்பிடுவீர்கள், ஆனால் திருப்தியடைய மாட்டீர்கள்.உங்கள் வயிறு காலியாகவே இருக்கும்.+ உங்களுடைய பொருள்களைப் பத்திரமான இடத்துக்குக் கொண்டுபோகப் பார்ப்பீர்கள், ஆனால் முடியாது.அப்படியே கொண்டுபோனாலும் நான் அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன். 15  விதை விதைப்பீர்கள், ஆனால் அறுவடை செய்ய மாட்டீர்கள். ஒலிவப் பழங்களைப் பிழிவீர்கள், ஆனால் அதன் எண்ணெயைப் பயன்படுத்த மாட்டீர்கள்.தித்திப்பான திராட்சமதுவைத் தயாரிப்பீர்கள், ஆனால் அதைக் குடிக்க மாட்டீர்கள்.+ 16  நீங்கள் உம்ரியின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்கள்,ஆகாப் வீட்டாருடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறீர்கள்.+ அவர்களுடைய ஆலோசனைப்படி நடக்கிறீர்கள்.அதனால், உங்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன்.மற்ற ஜனங்கள் உங்களைக் கேவலமாகப் பார்ப்பார்கள்.*+ உங்களைக் கேலி கிண்டல் செய்வார்கள்.”+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உன் கடவுளுடன்.”
வே.வா., “பற்றுமாறாத குணத்தை; மாறாத அன்பை.”
வே.வா., “எதிர்பார்க்கிறார்.”
அதாவது, “நடைமுறை ஞானம்.”
நே.மொ., “உங்களுடைய.”
நே.மொ., “உங்களைப் பார்த்து விசில் அடிப்பார்கள்.”