யோசுவா 12:1-24
12 யோர்தானின் கிழக்குப் பகுதியில் இருந்த தேசத்தை, அதாவது அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து*+ எர்மோன் மலை+ வரையிலும் கிழக்கே அரபா முழுவதிலும்+ இருந்த தேசத்தை, இஸ்ரவேலர்கள் கைப்பற்றி, அங்கிருந்த ராஜாக்களைத் தோற்கடித்திருந்தார்கள்.
2 அவர்களில் ஒருவன்தான், எஸ்போனில் வாழ்ந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன்.+ அவன் அர்னோன் பள்ளத்தாக்கின்+ ஓரத்தில் இருக்கிற ஆரோவேர் நகரத்தையும்+ கீலேயாத்தின் பாதிப் பிரதேசத்தையும் ஆட்சி செய்தான். அர்னோன் பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியிலிருந்து யாபோக் பள்ளத்தாக்கு வரையுள்ள முழு பகுதியையும் ஆட்சி செய்தான். இந்த யாபோக் பள்ளத்தாக்கு அம்மோனியர்களின் எல்லையாகவும் இருந்தது.
3 அரபா பகுதியையும் சீகோன் ஆட்சி செய்தான். அதாவது, கிழக்கே கின்னரேத் கடல்*+ வரைக்கும் அரபா கடலாகிய உப்புக் கடல்* வரைக்கும் உள்ள பகுதியையும் ஆட்சி செய்தான். உப்புக் கடலுக்குப் பக்கத்தில் பெத்-யெசிமோத்தின் திசையில் இருக்கிற அரபா வரைக்கும் தெற்கே பிஸ்கா+ மலைச் சரிவுகளின் அடிவாரம் வரைக்கும் அவனுடைய எல்லை விரிந்திருந்தது.
4 பாசானின் ராஜாவாகிய ஓகின்+ பகுதியையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றினார்கள். ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.+ அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்துவந்தான்.
5 எர்மோன் மலையையும், சல்காவையும், கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின்+ எல்லை வரையுள்ள பாசான்+ முழுவதையும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லை+ வரையுள்ள கீலேயாத்தின் பாதிப் பகுதியையும் ஆட்சி செய்தான்.
6 யெகோவாவின் ஊழியராகிய மோசேயும் இஸ்ரவேலர்களும் அவர்களைத் தோற்கடித்திருந்தார்கள்.+ அதன்பின் யெகோவாவின் ஊழியராகிய மோசே, அவர்களுடைய தேசத்தை ரூபன் கோத்திரத்துக்கும் காத் கோத்திரத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சொத்தாகக் கொடுத்திருந்தார்.+
7 யோர்தானின் மேற்கே, லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள+ பாகால்-காத்+ தொடங்கி சேயீருக்கு+ ஏறிப்போகும் ஆலாக் மலை+ வரையுள்ள தேசத்தை யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றினார்கள்.
8 அதாவது ஏத்தியர்கள், எமோரியர்கள்,+ கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களின் மலைப்பகுதியையும் சேப்பெல்லாவையும் அரபாவையும் மலைச் சரிவுகளையும் வனாந்தரத்தையும் நெகேபையும்+ கைப்பற்றினார்கள். பின்பு, இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தேசத்தை யோசுவா பிரித்துக் கொடுத்தார்.+ அவர்கள் கைப்பற்றிய தேசங்களின் ராஜாக்கள் இவர்கள்தான்:
9 எரிகோவின் ராஜா;+ பெத்தேலுக்குப் பக்கத்திலுள்ள ஆயி நகரத்தின் ராஜா;+
10 எருசலேமின் ராஜா; எப்ரோனின் ராஜா;+
11 யர்மூத்தின் ராஜா; லாகீசின் ராஜா;
12 எக்லோனின் ராஜா; கேசேரின் ராஜா;+
13 தெபீரின் ராஜா;+ கெதேரின் ராஜா;
14 ஓர்மாவின் ராஜா; ஆராத்தின் ராஜா;
15 லிப்னாவின் ராஜா;+ அதுல்லாமின் ராஜா;
16 மக்கெதாவின் ராஜா;+ பெத்தேலின்+ ராஜா;
17 தப்புவாவின் ராஜா; ஹேப்பேரின் ராஜா;
18 ஆப்பெக்கின் ராஜா; லசரோனின் ராஜா;
19 மாதோனின் ராஜா; ஆத்சோரின் ராஜா;+
20 சிம்ரோன்-மேரோனின் ராஜா; அக்சாப்பின் ராஜா;
21 தானாக்கின் ராஜா; மெகிதோவின் ராஜா;
22 கேதேசின் ராஜா; கர்மேலிலுள்ள யொக்னியாமின்+ ராஜா;
23 தோர் மலைச் சரிவுகளில் இருந்த தோரின் ராஜா;+ கில்காலில் இருந்த கோயிமின் ராஜா;
24 திர்சாவின் ராஜா; ஆக மொத்தம், 31 ராஜாக்கள்.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து.”
^ அதாவது, “கெனேசரேத்து ஏரி; கலிலேயா கடல்.”
^ அதாவது, “சவக் கடல்.”