யோபு 17:1-16

  • யோபுவின் பதில் தொடர்கிறது (1-16)

    • “கேலி செய்கிறவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்” (2)

    • “அவர் என்னைக் கேலி கிண்டலுக்கு ஆளாக்கிவிட்டார்” (6)

    • “கல்லறை என் வீடாகிவிடும்” (13)

17  பின்பு அவர்,“என் உயிர் ஊசலாடுகிறது, என் காலம் முடிந்துவிட்டது.கல்லறை எனக்காகக் காத்திருக்கிறது.+   கேலி செய்கிறவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.+அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு அலுத்துவிட்டது.   கடவுளே, எனக்காகத் தயவுசெய்து உத்தரவாதம் கொடுங்கள். வேறு யார் எனக்குக் கைகொடுத்து, எனக்காக உத்தரவாதம் தருவார்கள்?+   நீங்கள் அவர்களுடைய புத்தியை* மந்தமாக்கினீர்கள்.+அதனால்தான் அவர்களை உயர்த்தாமல் இருக்கிறீர்கள்.   நண்பர்களுக்குத் தானம் செய்யப்போவதாக ஒருவன் சொல்கிறான்.ஆனால், அவனுடைய பிள்ளைகளே மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள்.   அவர் என்னைக் கேலிகிண்டலுக்கு ஆளாக்கிவிட்டார்.+மற்றவர்கள் என் முகத்தில் காறித் துப்புகிறார்கள்.+   அழுது அழுது என் கண்கள் மங்கிவிட்டன.+என் கைகாலெல்லாம் ரொம்பவே மெலிந்துவிட்டன.   நீதிநேர்மையோடு நடப்பவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.கெட்டவர்களை* பார்த்து நல்லவர்கள் கொதித்துப்போகிறார்கள்.   நீதிமான் தன் வழியைவிட்டு விலகாமல் இருக்கிறான்.+கைச்சுத்தம் உள்ளவன் பலம் அடைகிறான்.+ 10  சரி, நீங்கள் எல்லாரும் தொடர்ந்து வாதாடிப் பாருங்கள்.ஏனென்றால், இதுவரை நீங்கள் யாருமே ஞானமாகப் பேசியதுபோல் எனக்குத் தெரியவில்லை.+ 11  என் காலம் முடிந்துவிட்டது.+என்னுடைய திட்டங்களும் இதயத்தின் ஆசைகளும் சுக்குநூறாகிவிட்டன.+ 12  நீங்கள் உண்மை பேசுவதற்குப் பதிலாகப் பொய் பேசுகிறீர்கள்.*இருள் சூழ்ந்திருக்கும்போது, ‘வெளிச்சம் வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள். 13  நான் கொஞ்சம் காத்திருந்தால், கல்லறை என் வீடாகிவிடும்.+அந்த இருட்டில் என் படுக்கையை விரிப்பேன்.+ 14  சவக்குழியைப்+ பார்த்து, ‘நீதான் என் தகப்பன்!’ என்று சொல்வேன். புழுக்களைப் பார்த்து, ‘என் தாயே! என் சகோதரியே!’ என்று சொல்வேன். 15  எனக்கு எங்கே நம்பிக்கை இருக்கிறது!+ எனக்கு நம்பிக்கை இருப்பதாக யார்தான் நினைப்பார்கள்? 16  அது* கல்லறைக்குள்* இறங்கும்.அதோடு சேர்ந்து நானும் மண்ணுக்குள் இறங்குவேன்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பகுத்தறிவை.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்களை; விசுவாசதுரோகிகளை.”
நே.மொ., “அவர்கள் இரவைப் பகலாக்குகிறார்கள்.”
அதாவது, “என் நம்பிக்கை.”
நே.மொ., “கல்லறையின் கதவுகளுக்குள்.”