யோபு 8:1-22

  • பில்தாத் முதல் தடவையாகப் பேசுகிறான் (1-22)

    • யோபுவின் பிள்ளைகள் பாவம் செய்திருப்பார்கள் என்று சொல்கிறான் (4)

    • ‘நீ நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு உதவி செய்வார்’ (6)

    • யோபு கடவுளை மறந்திருக்கலாம் என்று சொல்கிறான் (13)

8  அப்போது, சுவாகியனான+ பில்தாத்+ யோபுவிடம்,   “எவ்வளவு நேரம்தான் இப்படியே பேசிக்கொண்டிருப்பாய்?+ உன் வாயிலிருந்து வார்த்தைகள் புயல்போல் சீறிக்கொண்டு வருகின்றன!   கடவுள் நியாயமில்லாமல் நடந்துகொள்வாரா?சர்வவல்லமையுள்ளவர் நீதியைப் புரட்டுவாரா?   உன் பிள்ளைகள் அவருக்கு எதிராக ஏதாவது பாவம் செய்திருப்பார்கள்.அவர்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையைத்தான் கடவுள் கொடுத்திருக்கிறார்.   நீ இப்போது கடவுள்மேல் நம்பிக்கை வை.+சர்வவல்லமையுள்ளவரிடம் கருணைக்காகக் கெஞ்சு.   நீ உண்மையிலேயே தூய்மையாகவும் நேர்மையாகவும் நடப்பவனா என்று அவர் பார்ப்பார்.+நீ நல்லவனாக இருந்தால் உதவி செய்வார்.பழையபடி உன்னை உயர்த்துவார்.   இப்போது உன் நிலைமை மோசமாக இருக்கலாம்,ஆனால் உன் எதிர்காலம் அருமையாக இருக்கும்.+   முந்தைய தலைமுறையிடம் தயவுசெய்து கேட்டுப் பார்.அவர்களுடைய முன்னோர்கள் புரிந்துகொண்ட விஷயங்களை ஆராய்ந்து பார்.+   நாம் நேற்று பிறந்தவர்கள், நமக்கு என்ன தெரியும்?இந்த உலகத்தில் நம் வாழ்க்கை நிழல் போன்றது. 10  அவர்கள் உனக்குக் கற்றுக்கொடுப்பார்கள்.அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்வார்கள். 11  சேறு இல்லாமல் நாணற்புல்* ஓங்கி வளருமா? தண்ணீர் இல்லாமல் கோரைப்புல் உயரமாக வளருமா? 12  அது வெட்டப்படாமல் இளசாக இருந்தாலும்,மற்ற எல்லா புற்களையும்விட சீக்கிரத்தில் காய்ந்துபோகுமே. 13  கடவுளை மறந்துபோகிறவனுக்கும் இதே கதிதான் வரும்.கெட்டவனின்* எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். 14  அவனுடைய நம்பிக்கை வீணானது.சிலந்தி வலைபோல் உறுதி இல்லாதது. 15  அவன் தன்னுடைய வீட்டின் மேல் சாய்வான், அது சரிந்து விழும்.அதைப் பிடித்து நிறுத்தப் பார்ப்பான், ஆனால் அது தரைமட்டமாகும். 16  அவன் சூரிய வெளிச்சத்தில் வளரும் பசுமையான செடிபோல் இருக்கிறான்.அவனுடைய கிளைகள் தோட்டமெங்கும் படருகின்றன.+ 17  அவனுடைய வேர் கற்குவியலுக்குள் பின்னிக்கிடக்கிறது.அந்தக் கற்களுக்குள் வீட்டைத் தேடுகிறான்.* 18  ஆனால், அவனுடைய இடத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவான்.அந்த இடம், ‘நான் உன்னைப் பார்த்ததே இல்லை’ என்று சொல்லும்.+ 19  இப்படி அவன் இல்லாமல் போவான்.+அதன் பிறகு மற்ற செடிகொடிகள் அந்த இடத்தில் முளைக்கும். 20  உத்தமர்களை* கடவுள் ஒருபோதும் ஒதுக்கித்தள்ள மாட்டார்.கெட்டவர்களுக்கு அவர் உதவி செய்யவும் மாட்டார். 21  இனி அவர் உன்னை வாய்விட்டுச் சிரிக்க வைப்பார்.சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வைப்பார். 22  உன்னை வெறுக்கிறவர்கள் ரொம்பவே அவமானம் அடைவார்கள்.கெட்டவர்களின் கூடாரம் அழிந்துபோகும்” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “பாப்பிரஸ் புல்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனின்; விசுவாசதுரோகியின்.”
வே.வா., “கற்களாலான வீட்டைப் பார்க்கிறான்.”
வே.வா., “குற்றமற்றவர்களை.”