ரோமருக்குக் கடிதம் 5:1-21

  • கிறிஸ்து மூலம் கடவுளோடு சமரசம் (1-11)

  • ஆதாமால் மரணம், கிறிஸ்துவால் வாழ்வு (12-21)

    • பாவமும் மரணமும் எல்லாருக்கும் பரவியது (12)

    • ஒரே நீதியான செயல் (18)

5  விசுவாசத்தால் நாம் இப்போது நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால்,+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்கலாம்.*+  கிறிஸ்துமீதுள்ள விசுவாசத்தால் நாம் இப்போது இந்த அளவற்ற கருணையை அனுபவிக்கிறோம்.+ அதனால், கடவுள் நம்மை மகிமைப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் சந்தோஷப்படலாம்.*  அதுமட்டுமல்ல, உபத்திரவங்களிலும் சந்தோஷப்படலாம்.*+ ஏனென்றால், உபத்திரவம் சகிப்புத்தன்மையையும்,+  சகிப்புத்தன்மை கடவுளுடைய அங்கீகாரத்தையும், கடவுளுடைய அங்கீகாரம்+ நம்பிக்கையையும்+ உண்டாக்குகிறது என்பது நமக்குத் தெரியும்.  அந்த நம்பிக்கை ஏமாற்றம் தராது.+ ஏனென்றால், கடவுள் தன்னுடைய சக்தியை நமக்குத் தந்து தன்னுடைய அன்பை நம் இதயங்களில் பொழிந்திருக்கிறார்.+  உண்மையில், நாம் பலவீனர்களாக* இருந்தபோதே+ கடவுள்பக்தி இல்லாத மனிதர்களுக்காகக் குறித்த காலத்தில் கிறிஸ்து தன்னுடைய உயிரைக் கொடுத்தார்.  நீதிமானுக்காக ஒருவர் உயிரைக் கொடுப்பது அபூர்வம். ஒருவேளை நல்லவனுக்காக யாராவது தன் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.  ஆனாலும், நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்.+  கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலம் நாம் இப்போது நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதால்,+ கடவுளுடைய கடும் கோபத்துக்குத் தப்பி அவர் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா?+ 10  நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவருடைய மகனின் மரணத்தின் மூலம் அவரோடு சமரசம் செய்யப்பட்டோம்+ என்றால், இப்போது சமரசம் செய்யப்பட்டிருக்கிற நாம் அவருடைய மகனின் வாழ்வின் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா? 11  அதுமட்டுமல்ல, நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு நாம் இப்போது சமரசம் செய்யப்பட்டிருப்பதற்காகச்+ சந்தோஷமும் அடைகிறோம், இல்லையா? 12  ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.+ இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.+ 13  திருச்சட்டம் கொடுக்கப்பட்டதற்கு முன்பே இந்த உலகத்தில் பாவம் இருந்தது. ஆனால், திருச்சட்டம் இல்லாத காலத்தில் பாவத்துக்காக யார்மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை.+ 14  இருந்தாலும், ஆதாம்முதல் மோசேவரை வாழ்ந்தவர்கள் ஆதாம் செய்ததுபோல் கடவுளுடைய கட்டளையை மீறி பாவம் செய்யாதபோதிலும், மரணம் ஒரு ராஜாவாக அவர்கள்மீது ஆட்சி செய்துவந்தது. அந்த ஆதாம் பிற்பாடு வரவிருந்தவருக்கு ஒப்பாக இருந்தான்.+ 15  குற்றத்தால் வந்த விளைவும் இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒரே மனிதனுடைய குற்றத்தால் நிறைய பேருக்கு மரணம் வந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து என்ற ஒரே மனிதன் மூலம் கடவுள் கொடுத்த இலவச அன்பளிப்பாலும் அளவற்ற கருணையாலும்+ நிறைய பேருக்கு ஏராளமான நன்மை கிடைத்தது.*+ 16  ஒரே மனிதனுடைய பாவத்தால்+ வந்த விளைவும் கடவுளுடைய இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒருவனுடைய குற்றத்தால் மனிதர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது.+ ஆனால், பலருடைய குற்றங்களுக்குப் பின்பு கொடுக்கப்பட்ட அன்பளிப்பால் அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.+ 17  ஒருவனுடைய குற்றத்தால் அந்த ஒருவன் மூலம் மரணம் ராஜாவாக ஆட்சி செய்தது;+ அப்படியென்றால், அளவற்ற கருணையையும் நீதியாகிய அன்பளிப்பையும்+ ஏராளமாகப் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மூலம்+ வாழ்வு பெற்று ராஜாக்களாக ஆட்சி செய்யப்போவது+ அதிக நிச்சயம், இல்லையா? 18  அதனால், ஒரே மனிதன் குற்றம் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது+ போல, ஒரே மனிதன் நீதியான செயலைச் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.+ அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.+ 19  ஒரே மனிதன் கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது+ போல, ஒரே மனிதன் கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.+ 20  இப்படிப்பட்ட நிலையில், குற்றங்களை வெட்டவெளிச்சமாக்குவதற்குத் திருச்சட்டமும் வந்தது.+ ஆனால், பாவங்கள் பெருகப்பெருக அளவற்ற கருணையும் அதைவிட அதிகமாகப் பெருகியது. 21  எதற்காக? மரணத்தோடு சேர்ந்து பாவம் ராஜாவாக ஆட்சி செய்ததுபோல்+ நீதியின் மூலம் அளவற்ற கருணை ராஜாவாக ஆட்சி செய்வதற்காகத்தான். அந்த அளவற்ற கருணை நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முடிவில்லாத வாழ்வைத் தருகிறது.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “சமாதானமாக இருக்கிறோம்.”
அல்லது, “சந்தோஷப்படுகிறோம்.”
அல்லது, “சந்தோஷப்படுகிறோம்.”
அதாவது, “பாவிகளாக.”
வே.வா., “பொங்கிவழிந்தது.”