தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம் 2:1-15

  • எல்லா விதமான ஆட்களுக்காகவும் ஜெபம் (1-7)

    • ஒரே கடவுள், ஒரே மத்தியஸ்தர் (5)

    • எல்லாருக்காகவும் சரிசமமான மீட்புவிலை (6)

  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறிவுரைகள் (8-15)

    • அடக்கமாக உடை உடுத்துங்கள் (9, 10)

2  எல்லாரிடமும் நான் முதலாவதாகக் கேட்டுக்கொள்வது இதுதான்: நாம் கடவுள்பக்தி உள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் தொல்லையில்லாமல் அமைதியாக வாழ்வதற்கு எல்லா விதமான ஆட்களுக்காகவும்  ராஜாக்களுக்காகவும் உயர் அதிகாரிகளுக்காகவும்*+ கடவுளிடம் மன்றாடுங்கள், ஜெபம் செய்யுங்கள், வேண்டுதல் செய்யுங்கள், நன்றி சொல்லுங்கள்.+  இதுதான் நம்முடைய மீட்பரான கடவுளுடைய பார்வையில் சிறந்தது, சரியானது.+  எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற+ வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.*  ஒரே கடவுள்தான் இருக்கிறார்.+ கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில்+ ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார்,+ அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு.+  சரிசமமான மீட்புவிலையாகத்+ தன்னையே எல்லாருக்காகவும்* கொடுத்தவர் அவர்தான். இதைப் பற்றிய சாட்சியே குறித்த காலத்தில் கொடுக்கப்படும்.  இதற்காகத்தான்+ ஒரு பிரசங்கிப்பாளனாகவும் அப்போஸ்தலனாகவும்,+ அதாவது மற்ற தேசத்து மக்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக்கொடுக்கிற போதகனாகவும், நியமிக்கப்பட்டேன்;+ நான் சொல்வது உண்மை, பொய் அல்ல.  அதனால், நீங்கள் எல்லாரும் கூடிவருகிற இடங்களில் ஆண்கள் கடும் கோபத்தையும்+ தர்க்கங்களையும்+ தவிர்த்து, உண்மையோடு* தங்கள் கைகளை உயர்த்தி ஜெபம் செய்ய வேண்டும்+ என்று விரும்புகிறேன்.  அதேபோல், பெண்கள் விதவிதமான பின்னல் சடைகளாலும் தங்கத்தாலும் முத்துக்களாலும் விலை உயர்ந்த உடையினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்ளாமல், நேர்த்தியான* உடையினாலும் அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும்* தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.+ 10  அதோடு, கடவுள்பக்தி உள்ள பெண்களுக்குத் தகுந்தபடி நல்ல செயல்களால் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்+ என்று விரும்புகிறேன். 11  பெண்கள் அமைதியாக இருந்து, மிகவும் பணிவோடு கற்றுக்கொள்ள வேண்டும்.+ 12  கற்றுக்கொடுப்பதற்கோ, ஆண்கள்மேல் அதிகாரம் செலுத்துவதற்கோ பெண்களை நான் அனுமதிக்க மாட்டேன்; அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.+ 13  ஏனென்றால், ஆதாம்தான் முதலில் உருவாக்கப்பட்டான், பின்புதான் ஏவாள் உருவாக்கப்பட்டாள்.+ 14  அதோடு, ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்தான் முற்றிலும் ஏமாற்றப்பட்டாள்,+ அவள்தான் கட்டளையை மீறினாள். 15  ஆனாலும், பெண்கள் பிள்ளைகளைப் பெற்று+ தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும்*+ விசுவாசமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் நிலைத்திருந்தால் பாதுகாக்கப்படுவார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “உயர் பதவியில் இருக்கிறவர்களுக்காகவும்.”
வே.வா., “சித்தம்.”
வே.வா., “எல்லா விதமான மக்களுக்காகவும்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “சரியாக முடிவெடுக்கிற திறமையாலும்; விவேகத்தாலும்.”
வே.வா., “கண்ணியமான.”
வே.வா., “சரியாக முடிவெடுக்கிற திறமையுள்ளவர்களாகவும்; விவேகமுள்ளவர்களாகவும்.”