1 நாளாகமம் 4:1-43

  • யூதாவின் மற்ற வம்சத்தார் (1-23)

    • யாபேஷ் செய்த ஜெபம் (9, 10)

  • சிமியோன் வம்சத்தார் (24-43)

4  யூதாவின் மகன்கள்: பாரேஸ்,+ எஸ்ரோன்,+ கர்மீ, ஹூர்,+ சோபால்.+  சோபாலின் மகன் ராயா. ராயாவின் மகன் யாகாத்; யாகாத்தின் மகன்கள்: அகுமாய், லாகாத். இவர்களே சோராத்தியர் வம்சத்தார்.+  ஏத்தாமின்+ தகப்பனுடைய* மகன்கள்: யெஸ்ரயேல், இஷ்மா, இத்பாஸ், (இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி),  கேதோரின் தகப்பன் பெனூவேல்; உஷாவின் தகப்பன் ஏத்சேர். இவர்கள் எப்பிராத்தாவின் மூத்த மகனும் பெத்லகேமின்+ தகப்பனுமான ஹூரின்+ மகன்கள்;  தெக்கோவாவின்+ தகப்பன் அசூருக்கு+ ஏலாள், நாராள் என இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.  நாராள் அவருக்கு அகுசாமையும் ஹேப்பேரையும் தெமனியையும் ஆகாஸ்தாரியையும் பெற்றாள். இவர்களே நாராளின் மகன்கள்.  ஏலாளின் மகன்கள்: செரேத், இத்சேயார், எத்னான்.  கோசின் மகன்கள்: அனூப், சோபேபாகு. ஆருமின் மகன் அகர்கேலின் வம்சத்தாருடைய மூதாதைதான் கோஸ்.  யாபேஷ் தன் சகோதரர்களைவிட மதிப்பு மரியாதை பெற்றிருந்தார்; அவருடைய தாய், “நான் ரொம்ப வேதனைப்பட்டு அவனைப் பெற்றேன்” என்று சொல்லி அவருக்கு யாபேஷ்* என்று பெயர் வைத்தாள். 10  யாபேஷ் இஸ்ரவேலின் கடவுளிடம், “என்னை ஆசீர்வதியுங்கள், என் எல்லைகளை விரிவாக்குங்கள், உங்களுடைய கை எப்போதும் எனக்கு உதவி செய்யட்டும், கஷ்டங்களால் எனக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று வேண்டினார். அவர் வேண்டிக்கொண்டபடியே கடவுள் அவருக்கு உதவினார். 11  சூகாவின் சகோதரனாகிய கேலூபின் மகன் மேகீர்; மேகீரின் மகன் எஸ்தோன். 12  எஸ்தோனின் மகன்கள்: பெத்ராபா, பசெயா, தெகினா; தெகினாவின் மகன் இர்-நாகாஷ். இவர்களே ரேகாவில் வாழ்ந்தவர்கள். 13  கேனாசின் மகன்கள்: ஒத்னியேல்,+ செராயா; ஒத்னியேலின் மகன்* ஹாத்தாத். 14  மெயோனத்தாயின் மகன் ஒப்ரா. செராயாவின் மகன் யோவாப்; யோவாப் கெ-ஹாரஷிமின்* தகப்பன்; அவர்கள் கைத்தொழிலாளிகளாக இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. 15  எப்புன்னேயின் மகனான காலேபின்+ மகன்கள்: ஈரு, ஏலா, நாகாம். ஏலாவின் மகன் கேனாஸ். 16  எகலெலேலின் மகன்கள்: சீப், சீப்பா, திரியா, அசாரெயேல். 17  எஸ்ராகுவின் மகன்கள்: யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன். அவள்* கர்ப்பமாகி மிரியாம், சம்மாய், இஸ்பா ஆகியோரைப் பெற்றாள். இஸ்பா எஸ்தெமொவாவின் தகப்பன். 18  (அவருடைய யூத மனைவி, யெரேத்தையும் ஹேபெரையும் எக்குத்தியேலையும் பெற்றாள்; யெரேத், கேதோரின் தகப்பன்; ஹேபெர், சோகோவின் தகப்பன்; எக்குத்தியேல் சனோவாவின் தகப்பன்.) இவர்களே பார்வோனின் மகளான பித்தியாளின் மகன்கள். இவளை மேரேத் திருமணம் செய்திருந்தார். 19  ஒதியாவின் மனைவியுடைய, அதாவது நாஹாமின் சகோதரியுடைய, மகன்கள்: கர்மியருடைய கேகிலாவின் தகப்பன், மாகாத்தியருடைய எஸ்தெமொவாவின் தகப்பன். 20  ஷீமோனின் மகன்கள்: அம்னோன், ரின்னா, பென்-கானான், தீலோன். இஷியின் மகன்கள்: சோகேத், பென்-சோகேத். 21  யூதாவின் மகனான சேலாவின்+ மகன்கள்: லேக்காவின் தகப்பன் ஏர், மரேஷாவின் தகப்பன் லாதா, அஸ்பெயாவின் குடும்பத்தார், அதாவது உயர்தர துணிகளை நெய்த தொழிலாளர் குடும்பத்தார், 22  யோக்கீம், கோசேபாவைச் சேர்ந்த ஆண்கள், யசுபி-லெகேம், மோவாபியப் பெண்களை மணந்த யோவாஸ், சாராப். இந்தத் தகவல் பழங்காலப் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 23  இவர்கள் குயவர்கள். நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்து ராஜாவுக்காக வேலை பார்த்தார்கள். 24  சிமியோனின் மகன்கள்:+ நேமுவேல், யாமின், யாரிப், சேராகு, சாவூல்.+ 25  சாவூலின் மகன் சல்லூம், சல்லூமின் மகன் மிப்சாம், மிப்சாமின் மகன் மிஷ்மா. 26  மிஷ்மாவின் மகன்கள்: அம்முவேல், அம்முவேலின் மகன் சக்கூர், சக்கூரின் மகன் சீமேயி. 27  சீமேயிக்கு 16 மகன்களும் 6 மகள்களும் இருந்தார்கள்; ஆனால், அவருடைய சகோதரர்களுக்கு நிறைய மகன்கள் இல்லை. அவர்களுடைய வம்சம் யூதா வம்சத்தைப்+ போல் பெருகவில்லை. 28  அவர்கள் பெயெர்-செபா,+ மொலாதா,+ ஆத்சார்-சுவால்,+ 29  பில்கா, ஆத்சேம்,+ தோலாத், 30  பெத்துவேல்,+ ஓர்மா,+ சிக்லாகு,+ 31  பெத்-மார்காபோத், ஆத்சார்-சூசிம்,+ பெத்-பிரி, சாராயிம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார்கள். தாவீதின் ஆட்சி தொடங்கும்வரை இவையே அவர்களுடைய நகரங்கள். 32  அவர்கள் குடியிருந்த பகுதிகள்: ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான்+ ஆகிய ஐந்து நகரங்கள்; 33  அந்த நகரங்களைச் சுற்றியிருந்த கிராமங்கள், பாகால் நகரம்வரை இருந்த கிராமங்கள். அவர்களுடைய வம்சாவளிப் பட்டியலும் அவர்கள் வசித்த இடங்களும் இவையே. 34  சிமியோனின் வம்சத்தைச் சேர்ந்த தலைவர்கள்: மெசோபாப், யம்லேக், அமத்சியாவின் மகன் யோஷா, 35  யோவேல், ஆசியேலின் மகனாகிய செராயாவின் பேரனும் யோசிபியாவின் மகனுமாகிய யெகூ, 36  எலியோனாய், யாக்கோபா, யெசொகாயா, அசாயா, ஆதியேல், யெசிமியேல், பெனாயா, 37  செமாயாவின் மகனான ஷிம்ரிக்குப் பிறந்த யெதாயாவுடைய கொள்ளுப்பேரனும் அல்லோனின் பேரனும் சீப்பியின் மகனுமான சீசா; 38  இந்தப் பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் தங்களுடைய வம்சத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய தந்தைவழிக் குடும்பத்தார் ஏராளமாகப் பெருகினார்கள். 39  தங்களுடைய மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களைத் தேடி கேதோரின் நுழைவாசல்வரை, பள்ளத்தாக்கின் கிழக்குப் பக்கம்வரை, இவர்கள் போனார்கள். 40  கடைசியில், செழிப்பான நல்ல மேய்ச்சல் நிலங்களைப் பார்த்தார்கள். அந்தப் பிரதேசம் பரந்து விரிந்திருந்தது, அமைதியாக இருந்தது, எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருந்தது. முன்பு காமின் வம்சத்தார்+ அங்கே வாழ்ந்துவந்தார்கள். 41  இந்தப் பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் யூதாவை ஆண்ட எசேக்கியா+ ராஜாவின் காலத்தில் அங்கே போய் காமின் வம்சத்தாருடைய கூடாரங்களையும் அங்கிருந்த மெயூனீம் மக்களையும் அழித்துப்போட்டார்கள்; ஒருவரைக்கூட விட்டுவைக்கவில்லை. மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இருந்ததால், இவர்கள் அங்கே குடியேறினார்கள். 42  சிமியோனியர்களில் சிலர், அதாவது 500 பேர், இஷியின் மகன்களாகிய பெலத்தியா, நெயாரியா, ரெபாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையில் சேயீர் மலைப்பகுதிக்குப்+ போனார்கள். 43  அங்கே தப்பித்து வந்திருந்த அமலேக்கியர்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்;+ இந்நாள்வரை அங்கே வாழ்ந்துவருகிறார்கள்.

அடிக்குறிப்புகள்

இந்த அதிகாரத்தில் இருக்கிற சில பெயர்கள், ஆட்களைக் குறிக்காமல் இடங்களைக் குறிக்கலாம். ‘தகப்பன்’ என்பது அந்த நகரத்தை உருவாக்கியவரைக் குறிக்கலாம்.
யாபேஷ் என்ற பெயர், “வேதனை” என்பதற்குரிய எபிரெய வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம்.
நே.மொ., “மகன்கள்.”
அர்த்தம், “கைத்தொழிலாளிகளின் பள்ளத்தாக்கு.”
அநேகமாக 18-ஆம் வசனத்தில் குறிப்பிடப்படுகிற பித்தியாளாக இருக்கலாம்.