“கெட்ட வழியைவிட்டு விலகுங்கள்”
யெகோவாவின் சட்டங்கள் நம்மை பாதுகாக்கும். அதற்கு, நாம் அவருடைய சட்டங்களை நம் இதயத்தில் பதிய வைக்க வேண்டும். (நீதி 7:3) யெகோவாவை வணங்கும் ஒருவர் கெட்ட விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தால், சாத்தானின் வஞ்சக வலையில் சுலபமாக சிக்கிக்கொள்வார். கெட்ட வழியில் போய் மாட்டிக்கொண்ட ஒரு வாலிபனை பற்றி நீதிமொழிகள் 7-ஆம் அதிகாரம் சொல்கிறது. அவனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
-
நம் ஐம்புலன்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் விஷயங்களை பயன்படுத்தி சாத்தான் நம்மை தவறு செய்ய தூண்டுகிறான். அதன் மூலம், யெகோவாவிடம் இருந்து நம்மை பிரிக்க முயற்சி செய்கிறான்
-
கெட்ட வழியில் போவதால் வரும் மோசமான பாதிப்புகளை புரிந்துகொள்ளவும், யெகோவாவைவிட்டு நாம் விலகிபோகாமல் இருக்கவும் ஞானமும் புத்தியும் நமக்கு உதவும்