அக்டோபர் 17-23
நீதிமொழிகள் 12–16
பாட்டு 69; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தங்கத்தைவிட ஞானம் மேலானது”: (10 நிமி.)
நீதி 16:16, 17—ஞானமுள்ள ஒருவர் கடவுளுடைய வார்த்தையை படித்து அதை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார் (w07 7/15 8)
நீதி 16:18, 19—ஞானமுள்ள ஒருவர் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் நடந்துகொள்ள மாட்டார் (w07 7/15 8-9)
நீதி 16:20-24—ஞானமுள்ள ஒருவர் மற்றவர்களுக்கு நன்மை தரும் விதத்தில் பேசுகிறார் (w07 7/15 9-10)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
நீதி 15:15—நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? (g 11/13 16-E)
நீதி 16:4—யெகோவா எந்த அர்த்தத்தில் ‘தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனை உண்டாக்கினார்?’ (w07 5/15 18-19)
நீதிமொழிகள் 12 முதல் 16 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்த குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 15:18–16:6
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) யோவா 11:11-14 —உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். ஊழியத்தில் சந்திப்பவரை வாரயிறுதி கூட்டத்துக்கு அழையுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆதி 3:1-6; ரோ 5:12 —உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். மறுசந்திப்பு செய்த நபரை வாரயிறுதி கூட்டத்துக்கு அழையுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 191 ¶18-19—பைபிள் படிப்பு படிக்கும் நபரை கூட்டங்களுக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 117
“நல்ல பதில்கள் சொல்வது எப்படி?”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். யெகோவாவின் நண்பனாகு! பதில் சொல்றதுக்கு நல்லா தயாரிக்கணும் என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, சில பிள்ளைகளை மேடைக்கு அழைத்து இப்படிக் கேளுங்கள்: பதில்களை தயாரிக்க என்ன நான்கு விஷயங்களை செய்ய வேண்டும்? பதில் கேட்கவில்லை என்றாலும் ஏன் சோகமாக இருக்காமல் சந்தோஷப்படலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி.11 ¶1-11
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 133; ஜெபம்