கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நல்ல பதில்கள் சொல்வது எப்படி?
நல்ல பதில்கள் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளை பலப்படுத்தும். (ரோ 14:19) அதோடு, அதை சொல்லும் நபருக்கும் பிரயோஜனமாக இருக்கும். (நீதி 15:23, 28) அதனால், ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு பதிலாவது சொல்வதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். நாம் கையைத் தூக்கின உடனே நம்மிடம் பதில் கேட்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால், ஒரே ஒரு பதிலை தயாரிப்பதற்கு பதிலாக நிறைய பதில்களை தயாரிக்க வேண்டும்.
நல்ல பதில் எப்படி இருக்க வேண்டும்?
-
எளிமையாக, தெளிவாக, சுருக்கமாக இருக்க வேண்டும். பெரும்பாலும், 30 நொடிகளுக்குள் சொல்ல வேண்டும்
-
மனதிலிருந்து சொல்ல வேண்டும்
-
மற்றவர்கள் சொன்ன பதிலையே மறுபடியும் சொல்ல கூடாது
உங்களை முதலில் கேட்டால்...
-
கேள்விக்கான நேரடியான பதிலை எளிமையாக சொல்லுங்கள்
ஒருவேளை அந்தப் பதிலை இன்னொருவர் சொல்லிவிட்டால்...
-
பாராவில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனத்தை பயன்படுத்தி பதில் சொல்லுங்கள்
-
நம் வாழ்க்கைக்கு அந்த குறிப்பு எப்படி உதவும் என்று சொல்லுங்கள்
-
அந்த தகவலை எப்படி பயன்படுத்தலாம் என விளக்குங்கள்
-
பாராவில் இருக்கும் முக்கிய குறிப்பை ஆதரிக்கும் சுருக்கமான அனுபவத்தை சொல்லுங்கள்