Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 1–6

“யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு”

“யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு”

யெகோவாவை நாம் முழுமையாக நம்பலாம். அவருடைய பெயரின் அர்த்தத்தை புரிந்துகொண்டோம் என்றால், அவர் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று இன்னும் உறுதியாக நம்புவோம். அவர்மீது நம்பிக்கை வைக்க ஜெபமும் உதவும். நாம் யெகோவாமீது நம்பிக்கை வைத்தால் அவர் நம் “பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” அதாவது, நம் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் நீக்கிவிடுவார், என்று நீதிமொழிகள் 3-வது அதிகாரம் சொல்கிறது.

தன்னை ஒரு ஞானி என்று நினைத்துக் கொள்கிறவன்...

3:5-7

  • யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசிக்காமல் தானே தீர்மானங்களை எடுப்பான்

  • தன் சொந்த அறிவையோ அல்லது உலகத்தையோ நம்பியிருப்பான்

யெகோவாவை நம்புகிறவர்...

  • பைபிளை படிப்பார், அதைப் பற்றி ஆழமாக யோசிப்பார், ஜெபம் செய்வார். இதன் மூலம் யெகோவாவோடு அவருக்கு இருக்கும் பந்தத்தை பலப்படுத்துவார்

  • தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு அதை பற்றி பைபிளில் யெகோவா என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பார்

நான் தீர்மானங்களை எப்படி எடுக்கிறேன்?

முதல் விதம்: எது சரி என்று நான் நினைக்கிறேனோ அதைத்தான் நான் செய்வேன்

முதல் விதம்: யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்வேன். அதோடு, அவரிடம் ஜெபமும் செய்வேன்

இரண்டாவது விதம்: நான் எடுத்த தீர்மானத்தை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் கேட்பேன்

இரண்டாவது விதம்: பைபிள் என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வேன்