Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம்​​—⁠சொந்த விருப்பங்களை நாடாமலும், எரிச்சல் அடையாமலும் இருங்கள்

அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம்​​—⁠சொந்த விருப்பங்களை நாடாமலும், எரிச்சல் அடையாமலும் இருங்கள்

ஏன் முக்கியம்: அன்புதான் சீஷர்களின் அடையாளமாக இருக்கும் என்று இயேசு சொன்னார். (யோவா 13:34, 35) அவரைப் போல் அன்பு காட்ட, மற்றவர்களின் நலனை மனதில் வைக்க வேண்டும். எரிச்சல் அடையாமலும் இருக்க வேண்டும்.—1கொ 13:5.

எப்படிச் செய்வது:

  • சொல்லாலோ செயலாலோ ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டால், அப்படி அவர் நடந்துகொண்டதற்கான காரணத்தையும், பதிலுக்கு நீங்கள் ஏதாவது செய்தால் என்ன பிரச்சினைகள் வரும் என்பதையும் யோசியுங்கள்.—நீதி 19:11.

  • நாம் எல்லாருமே பாவிகள்தான்! நாமும் சிலசமயங்களில் மற்றவர்களைக் காயப்படுத்தி இருப்போம். பிறகு, அதை நினைத்து வருத்தப்பட்டிருப்போம்

  • கருத்துவேறுபாடுகளை உடனுக்குடன் சரி செய்யுங்கள்

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—சொந்த விருப்பங்களை நாடாமலும், எரிச்சல் அடையாமலும் இருங்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • டாம் சொன்ன கருத்தைக் கேட்டு லேரி எப்படிப் பிரதிபலித்தார்?

  • நிதானமாக யோசித்துப் பார்த்தது, கோபப்படாமல் இருக்க டாமுக்கு எப்படி உதவியது?

  • டாம் சாந்தமாகப் பேசியதால் இறுக்கமான சூழ்நிலை எப்படி மாறியது?

மற்றவர்கள் கோபப்படுத்தும்போது நாம் அமைதியாக இருந்தால், சபை எப்படி நன்மையடையும்?