Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 33-34

யெகோவாவின் தங்கமான குணங்கள்

யெகோவாவின் தங்கமான குணங்கள்

34:5-7

யெகோவாவுடைய குணங்களை மோசே நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். அதனால், இஸ்ரவேலர்களிடம் அவரால் பொறுமையாக நடந்துகொள்ள முடிந்தது. அதேபோல், நாமும் யெகோவாவுடைய குணங்களை நன்றாகப் புரிந்துகொண்டால், நம் சகோதர சகோதரிகளிடம் இரக்கத்தோடு நடந்துகொள்ள முடியும்.

  • ‘இரக்கமும் கரிசனையும் உள்ளவர்’: அப்பா அம்மா தங்களுடைய பிள்ளைகளை எப்படி அன்பாகவும் கரிசனையாகவும் கவனித்துக்கொள்கிறார்களோ அதேபோல், யெகோவாவும் தன்னை வணங்குகிறவர்களைக் கவனித்துக்கொள்கிறார்

  • “சீக்கிரத்தில் கோபப்படாதவர்”: யெகோவா தன் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துகொள்கிறார். அவர்களுடைய குறைகளைப் பொறுத்துக்கொள்வதோடு மாற்றங்கள் செய்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்

  • “மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்”: என்றென்றைக்கும் மாறாத அன்பினால் யெகோவா தனக்கும் தன் மக்களுக்கும் இடையே பாசப் பிணைப்பை ஏற்படுத்துகிறார்

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவைப் போல நான் எப்படி இரக்கமும் கரிசனையும் காட்டலாம்?’