சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்
இஸ்ரவேலர்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டதற்கு எது காரணமாக இருந்திருக்கும்? ஒருவேளை எகிப்தியர்களுடைய மனப்பான்மை அவர்களைத் தொற்றியிருக்கும். இன்று சிலை வழிபாடு பல விதங்களில் உருவெடுக்கலாம். அவற்றில் சில, நமக்கு சிலை வழிபாடு போலவே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை நாம் நிஜமாகவே சிலை வழிபாட்டில் ஈடுபடாமல் இருந்தாலும், சுயநல ஆசைகளுக்கு இடம் கொடுத்தால், யெகோவாவை முழு மனதோடு வணங்க முடியாமல் போய்விடும். இப்படிச் செய்யும்போது, நாம் சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவர்களாக ஆகிவிடுவோம்.
யெகோவாவை வணங்குவதிலிருந்து என்னென்ன விஷயங்கள் என்னைத் திசைதிருப்பலாம்? அவற்றைத் தடுக்க நான் என்ன செய்யலாம்?