கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஞானஸ்நானம் எடுக்க பைபிள் படிப்பவர்களுக்கு உதவுங்கள்
ஏன் முக்கியம்: பைபிள் படிப்பவர்கள் தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கடவுளிடம் நெருங்கிவர முடியும். (1பே 3:21) யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழும்போது, அவரோடு இருக்கும் பந்தத்தை பாதுகாக்க அவர் உதவுகிறார். (சங் 91:1, 2) அவர்கள் தங்களை அர்ப்பணிப்பது ஒரு மனிதனுக்கோ வேலைக்கோ அமைப்புக்கோ கிடையாது, யெகோவாவுக்குத்தான். அதனால், அவர்கள் யெகோவாமீது அன்பை வளர்த்துகொண்டு அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும்.—ரோ 14:7, 8.
எப்படி செய்வது?
-
பைபிள் படிப்பின்போது யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள். தினமும் பைபிளை வாசிப்பதும் “இடைவிடாமல்” ஜெபம் செய்வதும் முக்கியம் என்று சொல்லுங்கள்.—1தெ 5:17; யாக் 4:8.
-
யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க இலக்கு வைக்கும்படி பைபிள் படிப்பவரை உற்சாகப்படுத்துங்கள். கூட்டங்களில் பதில் சொல்வது, கற்றுக்கொண்ட விஷயங்களை பற்றி அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் கூட வேலை செய்பவர்களிடமும் பேசுவது போன்ற சின்னச் சின்ன இலக்குகளை அடைய அவருக்கு உதவுங்கள். அதேசமயத்தில் தனக்கு சேவை செய்ய சொல்லி யெகோவா யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. யெகோவாவுக்கு அர்ப்பணிப்பது ஒருவருடைய சொந்த தீர்மானம் என்பதை நினைவில் வையுங்கள்.—உபா 30:19, 20.
-
யெகோவாவை சந்தோஷப்படுத்தவும் ஞானஸ்நானம் எடுக்கவும் மாற்றங்களை செய்ய உற்சாகப்படுத்துங்கள். (நீதி 27:11) ஏனென்றால் சில குணங்களும் பழக்கங்களும் அவரிடம் வேரூன்றி இருக்கலாம். அதனால் பழைய சுபாவத்தை களைந்துபோட்டு புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள அவர்களுக்கு உதவி தேவை. (எபே 4:22-24) “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தலைப்பில் காவற்கோபுரத்தில் வெளிவரும் கட்டுரைகளில் உள்ள விஷயங்களை அவரிடம் பேசுங்கள்
-
யெகோவாவுக்கு சேவை செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள்.—ஏசா 48:17, 18.