Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)

கேள்வி: இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? என்ற துண்டுப்பிரதியை கொடுங்கள். “இந்த துண்டுப்பிரதிய எல்லாருக்கும் கொடுக்குறோம். நிறைய பேர் கேட்கிற ஒரு கேள்வி இதுல இருக்கு.” துண்டுப்பிரதியின் தலைப்பை காட்டுங்கள். “இது யோசிக்க வேண்டிய கேள்வி, இல்லையா? இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க... வருவாங்க? வரமாட்டாங்க? வரலாம்?”

வசனம்: 1கொ 15:26

பிரசுரம்: இத பத்தி ஒரு வேத புத்தகத்தில என்ன சொல்லியிருக்குனு இந்த துண்டுப்பிரதில இருக்கு. இத படிச்சு பாருங்க.

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம்)

கேள்வி: நமக்கு பிரியமானவங்க... நமக்கு தெரிஞ்சவங்க... யாராவது இறந்து போயிருப்பாங்க. அவங்கள மறுபடியும் உயிரோட பார்க்க முடியுமா?

வசனம்: அப் 24:15

பிரசுரம்: அத பத்தி இந்த துண்டுப்பிரதியில இருக்கு. படிச்சு பாருங்க.

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்

கேள்வி: வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது எல்லாரும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறாங்க. நம்ம வேண்டுதலை எல்லாம் கடவுள் கேட்கிறாரா? நீங்க என்ன நினைக்கிறீங்க?

வசனம்: 1பே 3:12

பிரசுரம்: கடவுள பத்தி நிறைய விஷயங்கள் பைபிள்ல இருக்கு. அத தெரிஞ்சிக்க இந்த புத்தகம் உங்களுக்கு உதவியா இருக்கும். [பக்கங்கள் 24, 25-ஐ காட்டி பேசுங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.