கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—JW.ORG-ஐப் பயன்படுத்துங்கள்
ஏன் முக்கியம்: ஊழியத்துக்கான கருவிகள் எல்லாமே jw.org-ஐப் பார்க்கும்படி சொல்கின்றன. சொல்லப்போனால், கான்டாக்ட் கார்டு மற்றும் வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? என்ற துண்டுப்பிரதியின் முக்கியக் குறிக்கோளே, நம் வெப்சைட்டை பார்க்க மக்களுக்கு உதவுவதுதான்! jw.org-ஐப் பயன்படுத்தி, இ-மெயில் வழியாகவோ லிங்க் மூலமாகவோ மற்றவர்களுக்கு நம் பிரசுரங்களை அனுப்பலாம். முக்கியமாக, நீங்கள் சாட்சி கொடுக்கும் நபர் வேறு மொழி பேசுபவர் என்றால், இது ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். சிலசமயங்களில், ஊழியத்துக்குப் பயன்படுத்துகிற பிரசுரங்களில் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி யாராவது நம்மிடம் கேட்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், jw.org-ஐப் பயன்படுத்தி நம்மால் அவர்களுக்குத் திறமையாகப் பதில் சொல்ல முடியும்.
எப்படிச் செய்வது:
-
“பைபிள் போதனைகள்.” பிள்ளை வளர்ப்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு பெற்றோரிடம் நீங்கள் பேசுகிறீர்கள். அப்போது, பைபிள் போதனைகள் > திருமணமும் குடும்பமும் என்ற பகுதியைப் பயன்படுத்துங்கள்.
-
“வெளியீடுகள்.” பள்ளியில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிறீர்கள். அல்லது, கூடப்படிப்பவர்களிடம் இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும் என்ற சிற்றேட்டைக் கொடுக்கிறீர்கள். அப்போது, வெளியீடுகள் > புத்தகங்கள், சிறு புத்தகங்கள் என்ற பகுதியைப் பயன்படுத்துங்கள்.
-
“எங்களைப் பற்றி.” உங்களோடு வேலை செய்யும் ஒருவர், நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அப்போது, எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பகுதியைப் பயன்படுத்துங்கள்.
JW.ORG-ஐப் பயன்படுத்துங்கள் என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, பின்வரும் நபர்களுக்கு உதவ நம்முடைய வெப்சைட்டில் இருக்கிற எந்தப் பகுதியைப் பயன்படுத்தலாம் என்று யோசித்துப்பாருங்கள்:
-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்
-
சமீபத்தில் நடந்த ஒரு துக்க சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்
-
செயலற்ற பிரஸ்தாபி
-
நம்முடைய வேலைக்கு எப்படிப் பண உதவி கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பும் நம்முடைய மறுசந்திப்பு
-
தன்னுடைய சொந்த நாட்டில் எங்கே கூட்டங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு வெளிநாட்டுக்காரர்