Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் சகோதரனுக்காகவும் இயேசு இறந்தார்

உங்கள் சகோதரனுக்காகவும் இயேசு இறந்தார்

பாவ இயல்புள்ள மனிதர்களுக்காக இயேசு தன் உயிரைத் தியாகம் செய்தார். (ரோ 5:8) இயேசு நமக்காகத் தன் உயிரைக் கொடுத்ததன் மூலம் நம்மேல் வைத்திருந்த அன்பைக் காட்டியிருக்கிறார்; அதற்காக, நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நம் சகோதரர்களுக்காகவும் அவர் தன் உயிரைக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மைப் போலவே பாவ இயல்புள்ள நம் சகோதர சகோதரிகளிடம் நாம் எப்படிக் கிறிஸ்துவைப் போல அன்பு காட்டலாம்? அதற்கான மூன்று வழிகள்: ஒன்று, நட்பு வட்டாரத்தை நாம் விரிவாக்க வேண்டும்; வித்தியாசப்பட்ட பின்னணியிலிருந்து வந்திருப்பவர்களிடமும் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். (ரோ 15:7; 2கொ 6:12, 13) இரண்டு, மற்றவர்கள் புண்படுகிற விதத்தில் நாம் எதையாவது செய்துவிடாமல் இருக்க அல்லது சொல்லிவிடாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். (ரோ 14:13-15) மூன்று, யாராவது நமக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டால், உடனடியாக அவர்களை மன்னிக்க வேண்டும். (லூ 17:3, 4; 23:34) இந்த வழிகளில் நாம் இயேசுவைப் பின்பற்ற கடினமாக முயற்சி செய்தால், சபையை யெகோவா ஆசீர்வதிப்பார்; சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் சபையில் பஞ்சமே இருக்காது.

இன்னும் அழகாகுங்கள்! என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • தன்னுடைய சபையைப் பற்றி மிக்கி ஆரம்பத்தில் எப்படி உணர்ந்தார்?

  • அவருடைய எண்ணங்கள் மாறியதற்கு எது காரணமாக இருந்தது?

  • தான் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள இயேசுவின் உதாரணம் மிக்கிக்கு எப்படி உதவியது? (மாற் 14:38)

  • சகோதர சகோதரிகளைப் பற்றி நல்ல விதமாக நினைக்க நீதிமொழிகள் 19:11 எப்படி நமக்கு உதவுகிறது?