Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 21-27

யெகோவாவைப் பற்றி யோபு தவறாக யோசிக்கவில்லை

யெகோவாவைப் பற்றி யோபு தவறாக யோசிக்கவில்லை

யெகோவாமீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச்செய்ய சாத்தான் இன்று நிறைய பொய்களை சொல்கிறான். யெகோவா உண்மையிலேயே நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதற்கும் சாத்தான் சொல்லும் பொய்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யோபு புத்தகத்தை படிக்கும்போது அதை கவனியுங்கள். யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது என்பதை காட்டும் வேறு வசனங்களையும் எழுதுங்கள்.

சாத்தான் சொல்லும் பொய்கள்

யெகோவா உண்மையிலேயே என்ன நினைக்கிறார்

கடவுள் ரொம்ப கறாரானவர். அவருக்கு பிடித்தமாதிரி நடக்க என்னதான் முயற்சி எடுத்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர் உண்டாக்கின எந்த ஒரு படைப்பாலும் அவரை சந்தோஷப்படுத்த முடியாது (யோபு 4:18; 25:5)

அவரை சந்தோஷப்படுத்த நாம் செய்யும் சின்ன விஷயங்களைக்கூட யெகோவா பெரிதாக நினைக்கிறார் (யோபு 36:5)

கடவுளுடைய பார்வையில் மனிதர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் (யோபு 22:2)

நாம் அவருக்கு செய்யும் சேவையை கவனித்து நம்மை ஆசீர்வதிப்பார் (யோபு 33:26; 36:11)

நாம் நல்லவர்களாக இருக்கிறோமா இல்லையா என்பதைப் பற்றி கடவுளுக்கு அக்கறை இல்லை (யோபு 22:3)

யெகோவா, நல்லவர்களை எப்போதும் அக்கறையாக கவனித்துக்கொள்கிறார் (யோபு 36:7)