Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? (T-37 துண்டுப்பிரதி)

கேள்வி: இந்த உலகம் யார் கையில இருக்கு? கஷ்டங்களுக்கு முடிவு வருமா? இறந்தவங்க மறுபடியும் உயிரோடு வருவாங்களா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் எங்க கிடைக்கும்னு நினைக்கிறீங்க? [ஆர்வமாக கேட்டால் தொடர்ந்து பேசுங்கள்.]

வசனம்: சங் 119:144, 160

பிரசுரம்: இந்த மாதிரி நிறைய கேள்விக்கான பதில jw.org வெப்சைட்ல இருந்து தெரிஞ்சுக்கலாம். அந்த வெப்சைட்ல வேற என்னென்ன விஷயங்கள் இருக்குனு இந்த துண்டுப்பிரதில சொல்லியிருக்கு.

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? (T-37 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம்)

 

கேள்வி: ஒரு வெப்சைட்டை பத்தி நாங்க எல்லாருக்கும் சொல்றோம். பிள்ளைகள், இளைஞர்கள், கணவன்-மனைவி, பெற்றோர்னு எல்லாருக்கும் பிரயோஜனமான நல்ல விஷயங்கள் இந்த வெப்சைட்ல இருக்கு. [அதிகமாக தெரிந்துகொள்ள விரும்பினால் துண்டுப்பிரதியை கொடுங்கள்.]

வசனம்: சங் 119:105

பிரசுரம்: [துண்டுப்பிரதியின் 2-வது பக்கத்தைக் காட்டுங்கள்.] jw.org வெப்சைட்ல நிறைய கட்டுரைகளும் வீடியோக்களும் இருக்கு. அது உங்களுக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கும்.

கடவுள் சொல்வதைக் கேளுங்கள்

கேள்வி: நாம எல்லாரும் எந்த வியாதியும் வேதனையும் இல்லாம வாழணும்னு ஆசப்படுறோம். அப்படிப்பட்ட ஒரு காலம் வரும்னு கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார். அத பைபிள்ல இருந்து உங்களுக்கு காட்ட நான் ஆசப்படுறேன். [ஆர்வமாக கேட்டால் இந்த வசனத்தை வாசியுங்கள்.]

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: நம்ம எல்லாரையும் படைச்ச கடவுள் எதிர்காலத்தில நமக்காக என்ன செய்யப்போறாருனு தெரிஞ்சுக்க இந்த புத்தகம் உதவி செய்யும். [பக்கங்கள் 22, 23.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

 

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.