Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 25–28

எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்

எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்

சீலோவை யெகோவா கைவிட்டதுபோல எருசலேமையும் அவர் கைவிட்டுவிடுவார் என்று எரேமியா எச்சரித்தார்

26:6

  • சீலோவில் இருந்த ஒப்பந்தப் பெட்டி யெகோவாவின் பிரசன்னத்தை குறித்தது

  • ஒப்பந்தப் பெட்டியை பெலிஸ்தியர்கள் கைப்பற்றிக்கொண்டு போகும்படி யெகோவா அனுமதித்தார். அந்த பெட்டி சீலோவுக்கு திரும்பி வரவே இல்லை

குருமார்களும் தீர்க்கதரிசிகளும் பொது மக்களும் எரேமியாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள்

26:8, 9, 12, 13

  • எருசலேமும் ஆலயமும் அழிந்துவிடும் என்று எரேமியா தீர்க்கதரிசனம் சொன்னார். அதை கேட்டதும் மக்கள் அவரைப் பிடித்து, “உன்னைத் தீர்த்துக்கட்டப் போகிறோம்” என்று சொல்லி அவரை சூழ்ந்துகொண்டார்கள்

  • ஆனால் எரேமியா சோர்ந்து போய் அந்த இடத்தைவிட்டு ஓடிவிடவில்லை

யெகோவா எரேமியாவை பாதுகாத்தார்

26:16, 24

  • எரேமியா தொடர்ந்து தைரியமாக இருந்தார். யெகோவாவும் அவரை கைவிடவில்லை

  • எரேமியாவை பாதுகாப்பதற்கு தைரியசாலியான அகீக்காமின் மனதை யெகோவா தூண்டினார்

பலருக்கு கசப்பாக இருந்த ஒரு செய்தியை எரேமியா 40 வருடங்களாக சொன்னார். யெகோவாவின் துணையாலும் அவர் கொடுத்த உற்சாகத்தாலும் எரேமியாவால் அந்த செய்தியை தொடர்ந்து சொல்ல முடிந்தது