கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தைரியத்தை தரும் ராஜ்ய பாடல்கள்
சிறையில் இருந்தபோது பவுலும் சீலாவும் கடவுளை துதித்து பாடல்களை பாடினார்கள். (அப் 16:25) நம் காலத்திலும் சில சகோதரர்கள் இதைத்தான் செய்தார்கள். சைபீரியாவில் கைதிகளாக இருந்த சகோதரர்களும் நாசி ஜெர்மனியின் சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமிலிருந்த சகோதரர்களும் ராஜ்ய பாடல்களை பாடினார்கள். ராஜ்ய பாடல்கள், சோதனைகளை சகிக்க தேவையான தைரியத்தை நமக்கு கொடுக்கும் என்பதை இந்த அனுபவங்கள் காட்டுகின்றன.
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’” என்ற புதிய பாட்டு புத்தகம் பல மொழிகளில் சீக்கிரத்தில் கிடைக்கும். உங்கள் மொழியில் கிடைத்த உடனேயே குடும்ப வழிபாட்டில் அந்த புதிய பாடல்களை பாடி பழகுங்கள். அப்படி செய்தால் பாட்டு வரிகள் உங்கள் மனதில் பதியும். (எபே 5:19) சோதனைகளில் சிக்கி தவிக்கும்போது அந்த பாட்டு வரிகளை கடவுளுடைய சக்தி உங்களுக்கு ஞாபகப்படுத்தும். எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் அருமையான வாழ்க்கையை பற்றி யோசித்துப் பார்க்க இந்த பாடல்கள் நமக்கு உதவி செய்யும். சோதனைகளை சமாளிக்க தைரியத்தையும் தரும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயங்களிலும் யெகோவாவை புகழ்ந்து ‘சந்தோஷமாக பாட’ இந்த புதிய பாடல்கள் உங்களை தூண்டும். (1நா 15:16; சங் 33:1-3) அதனால், ராஜ்ய பாடல்களை நன்றாக பயன்படுத்தி யெகோவாவை சந்தோஷமாக துதித்திடுங்கள்.
-
எந்த சூழ்நிலையில் சகோதரர் ஃப்ராஸ்டு ஒரு பாட்டை எழுதினார்?
-
சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமிலிருந்த சகோதரர்களுக்கு அந்த பாடல் எப்படி தைரியத்தை கொடுத்தது?
-
ராஜ்ய பாடல்கள் இன்று நமக்கு எப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் தைரியத்தை கொடுக்கின்றன?
-
எந்த ராஜ்ய பாடலை நீங்கள் மனப்பாடம் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?