Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

அவர்களை அன்போடு வரவேற்றிடுங்கள்!

அவர்களை அன்போடு வரவேற்றிடுங்கள்!

யாரை? நம் கூட்டங்களுக்கு வரும் எல்லாரையும் அன்போடு வரவேற்றிடுங்கள். (ரோ 15:7; எபி 13:2) ஒருவேளை, வேறு நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு சாட்சியோ ரொம்ப காலம் கூட்டங்களுக்கே வராத ஒரு செயலற்ற பிரஸ்தாபியோ கூட்டத்துக்கு வந்திருந்தால் அவர்களையும் நீங்கள் அன்பாக வரவேற்க வேண்டும். அவர்களுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், நீங்களும் அதைத்தானே எதிர்பார்ப்பீர்கள்? (மத் 7:12) கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பும் கூட்டம் முடிந்த பிறகும் ராஜ்ய மன்றத்துக்கு வந்திருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்ல நீங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது? இப்படி செய்வது, சபையில் ஒரு அன்பான சூழலை ஏற்படுத்தும். அது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும். (மத் 5:16) ஒவ்வொரு நபரையும் பார்த்து பேசுவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை வரவேற்க முயற்சி செய்யும்போது எல்லாரும் சந்தோஷமாக உணருவார்கள். *

சில விசேஷ நிகழ்ச்சிகளில், அதாவது நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, எல்லா சமயங்களிலும் புதியவர்களை அன்பாக வரவேற்க வேண்டும். நம் மத்தியில் கிறிஸ்தவ அன்பு இருப்பதை பார்க்கும்போது புதியவர்களும் யெகோவாவை புகழ்வார்கள். நம்மோடு சேர்ந்து அவரை வணங்குவார்கள்.—யோவா 13:35.

^ பாரா. 3 சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்கள் நம் கூட்டங்களுக்கு வரும்போது நாம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லக்கூடாது என்று பைபிள் நியமங்கள் சொல்கிறது. —1கொ 5:11; 2யோ 10.