நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஏப்ரல் 2018
இப்படிப் பேசலாம்
பைபிள் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றி தொடர்ந்து பேச உதவும் குறிப்புகள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பஸ்கா மற்றும் நினைவுநாள் நிகழ்ச்சி—ஒற்றுமைகளும் வித்தியாசங்களும்
பஸ்கா, நினைவுநாள் நிகழ்ச்சிக்கு முன்நிழலாக இல்லையென்றாலும் அதிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
புறப்பட்டுப் போய், சீஷர்களாக்குங்கள்—ஏன், எங்கே, எப்படி?
இயேசுவின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பது சீஷர்களாக்குவதில் அடங்கியிருக்கிறது. நாம் மற்றவர்களை சீஷர்களாக்கும்போது, இயேசுவுடைய போதனையின்படி எப்படி வாழ்வது என்பதையும் அவருடைய முன்மாதிரியை வாழ்க்கையில் எப்படிப் பின்பற்றுவது என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பிரசங்கிப்பதும் கற்பிப்பதும்—சீஷர்களாக்குவதற்கு அவசியம்
புறப்பட்டுப் போய் சீஷர்களாக்கும்படி தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார். இதில் என்ன அடங்கியிருக்கிறது? ஆன்மீக முன்னேற்றங்கள் செய்ய நாம் எப்படி மக்களுக்கு உதவலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
மாற்கு 2:5-12-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அற்புதத்திலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? நோயால் வரும் கஷ்டங்களைச் சகிக்க இந்தப் பதிவு நமக்கு எப்படி உதவும்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஓய்வுநாளில் குணப்படுத்துதல்
யூத மதத் தலைவர்களுடைய மனப்பான்மையைப் பார்த்து இயேசு ஏன் ரொம்பவே வேதனைப்பட்டார்? இயேசுவைப் போலவே கரிசனையாக நடந்துகொள்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள எந்தக் கேள்விகள் உதவும்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
இறந்துபோன நம் அன்பானவர்களை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்குச் சக்தி இருக்கிறது
பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதல் பதிவுகளைத் தியானித்துப் பார்க்கும்போது, இறந்துபோன நம் அன்பானவர்களும் எதிர்காலத்தில் உயிரோடு வருவார்கள் என்ற நம் நம்பிக்கை பலப்படுகிறது.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்துக்கான கருவிகளைத் திறமையாகப் பயன்படுத்துங்கள்
திறமையாகக் கற்றுக்கொடுக்க நம்மிடம் இருக்கும் கருவிகளை நன்றாகப் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். நம்முடைய முக்கியமான கருவி எது? ஊழியத்துக்கான கருவிகளைப் பயன்படுத்துவதில் நாம் எப்படி இன்னும் முன்னேறலாம்?