ஏப்ரல் 2-8
மத்தேயு 26
பாட்டு 8; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பஸ்கா மற்றும் நினைவுநாள் நிகழ்ச்சி—ஒற்றுமைகளும் வித்தியாசங்களும்”: (10 நிமி.)
மத் 26:17-20—இயேசு தன் அப்போஸ்தலர்களோடு சேர்ந்து கடைசி பஸ்கா உணவைச் சாப்பிட்டார் (“பஸ்கா உணவு” என்ற மத் 26:18-க்கான nwtsty மீடியா)
மத் 26:26—நினைவுநாளன்று பயன்படுத்தப்படும் ரொட்டி, இயேசுவின் உடலைக் குறிக்கிறது (“குறிக்கிறது” என்ற மத் 26:26-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 26:27, 28—நினைவுநாளன்று பயன்படுத்தப்படும் திராட்சமது, “ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் [இயேசுவின்] இரத்தத்தை” குறிக்கிறது (“ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை” என்ற மத் 26:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 26:17—நிசான் 13-ம் தேதி, ‘புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதலாம் நாள்’ என்று ஏன் சொல்லப்படலாம்? (“புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதலாம் நாளில்” என்ற மத் 26:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 26:39—‘இந்தக் கிண்ணம் என்னிடமிருந்து நீங்கும்படி செய்யுங்கள்’ என்று இயேசு ஜெபம் செய்ததற்கு எது காரணமாக இருந்திருக்கலாம்? (“இந்தக் கிண்ணம் . . . நீங்கும்படி செய்யுங்கள்” என்ற மத் 26:39-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத்தேயு 26-ம் அதிகாரத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரத்திலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 26:1-19
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேசுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 59 பாரா. 21, 22 மற்றும் பின்குறிப்பு
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (8 நிமி.)
யெகோவாவின் நண்பனாகு!—மீட்புவிலை: (7 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளை மேடைக்கு அழைத்து இப்படிக் கேளுங்கள்: ஜனங்களுக்கு ஏன் நோய் வருது, ஏன் வயசாகுது, ஏன் செத்துப்போறாங்க? யெகோவா நமக்கு என்ன நம்பிக்கையை கொடுத்திருக்கிறாரு? பூஞ்சோலை பூமியில யார பார்க்கணும்னு ஆசைப்படுற?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 16 பாரா. 9-14, பெட்டி பக். 220-221
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 26; ஜெபம்