Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 23-​29

மாற்கு 3-4

ஏப்ரல் 23-​29
  • பாட்டு 143; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஓய்வுநாளில் குணப்படுத்துதல்”: (10 நிமி.)

    • மாற் 3:1, 2—இயேசுவைக் கண்டனம் செய்ய யூத மதத் தலைவர்கள் காரணம் தேடிக்கொண்டே இருந்தார்கள் (jy பக். 78 பாரா. 1-2)

    • மாற் 3:3, 4—ஓய்வு நாளைப் பற்றிய மதத் தலைவர்களின் கருத்துகள் வேதவசனங்களுக்கு முரணாக இருந்ததையும், அவை மக்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்தியதையும் இயேசு தெரிந்துவைத்திருந்தார் (jy பக். 78 பாரா 3)

    • மாற் 3:5—மதத் தலைவர்களுடைய “இதயம் மரத்துப்போயிருந்ததை நினைத்து [இயேசு] மிகவும் துக்கப்பட்டார்” (“கோபத்தோடு . . . பார்த்தார்; . . . மிகவும் துக்கப்பட்டார்” என்ற மாற் 3:5-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மாற் 3:29—கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்வது என்றால் என்ன, அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? (“கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை,” “தீராத பாவத்துக்கே அவன் ஆளாவான்” என்ற மாற் 3:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மாற் 4:26-29—விதையைத் தூவுகிற ஒருவன் தூங்குவதைப் பற்றிய இயேசுவின் உதாரணத்திலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (w14 12/15 பக். 12-13 பாரா. 6-8)

    • மாற்கு 3 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 3:1-19அ

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேசுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 36 பாரா. 21-22—மனதைத் தொடும் விதத்தில் படிப்பை நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 123

  • “கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”: (15 நிமி.) மாற்கு 4:9-ன் அர்த்தத்தை விளக்குங்கள் (“கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்ற மாற் 4:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு). ஆலோசனையைக் கேட்டு, ஞானமுள்ளவனாகு என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகம், அதி. 4, ‘ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்ற பெட்டியில் இருக்கிற தகவல்களைக் கலந்துபேசுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 17 பாரா. 11-22

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 64; ஜெபம்