ஏப்ரல் 8-14
1 கொரிந்தியர் 10-13
பாட்டு 91; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா நம்பகமானவர்”: (10 நிமி.)
1கொ 10:13—எப்படிப்பட்ட சோதனைகளை நாம் எதிர்ப்பட வேண்டும் என்று யெகோவா முடிவு செய்வதில்லை (w17.02 பக். 29-30)
1கொ 10:13—‘மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனைதான்’ நமக்கும் வருகிறது
1கொ 10:13—யெகோவாவை நம்பினால், எப்படிப்பட்ட சோதனையையும் சகித்துக்கொள்ள அவர் உதவுவார்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
1கொ 10:8—பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் 23,000 இஸ்ரவேலர்கள் ஒரே நாளில் இறந்துபோனதாக இந்த வசனம் சொல்கிறது. ஆனால், 24,000 பேர் இறந்துபோனதாக எண்ணாகமம் 25:9 சொல்கிறது. ஏன்? (w04 4/1 பக். 29)
1கொ 11:5, 6, 10—ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஞானஸ்நானம் எடுக்காத ஒரு சகோதரர் அங்கே இருந்தால், அந்தச் சகோதரி முக்காடு போட வேண்டுமா? (w15 2/15 பக். 30)
1 கொரிந்தியர் 10 முதல் 13 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1கொ 10:1-17 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 1)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசுரங்களில் ஒன்றை அறிமுகப்படுத்துங்கள். (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
‘உறுப்புகள் மிகவும் அவசியம்’ (1கொ 12:22): (10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.
“நினைவுநாளுக்காக நீங்கள் எப்படித் தயாராகலாம்?”: (5 நிமி.) பேச்சு. நினைவுநாளுக்கு முன்பும் பின்பும் நினைவுநாளன்றும், அதை ஏன் அனுசரிக்கிறோம் என்பதைப் பற்றியும், யெகோவாவும் இயேசுவும் காட்டியிருக்கும் அன்புக்கு எப்படி இன்னும் அதிக நன்றியைக் காட்டலாம் என்பதைப் பற்றியும் ஆழமாக யோசித்துப்பார்க்கச் சொல்லி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 17 பாரா. 1-9
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 92; ஜெபம்