Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நினைவுநாளுக்காக நீங்கள் எப்படித் தயாராகலாம்?

நினைவுநாளுக்காக நீங்கள் எப்படித் தயாராகலாம்?

இந்த வருஷத்திலிருந்து, கிறிஸ்துவின் நினைவுநாளுக்காகத் தயாராவதற்கு, நமக்கு அதிக நேரம் கிடைக்கும். வாரநாட்களில் நினைவுநாள் வந்தால், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டம் இருக்காது. வாரயிறுதி நாட்களில் வந்தால், பொதுப்பேச்சும் காவற்கோபுர படிப்பும் இருக்காது. அதனால், இந்தக் கூடுதலான நேரத்தை சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்வீர்களா? முதல் நூற்றாண்டில் செய்ததைப் போலவே, இப்போதும் சில நடைமுறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. (லூ 22:7-13; km 3/15 பக். 1) அதோடு, நம் இதயத்தைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. இதை எப்படிச் செய்யலாம்?

  • அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள்.—1கொ 11:23-26

  • உங்களுக்கும் யெகோவாவுக்கும் இருக்கும் பந்தம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள்; அதைப் பற்றி ஜெபம் செய்யுங்கள்.—1கொ 11:27-29; 2கொ 13:5

  • நினைவுநாளின் அர்த்தத்தை விளக்கும் பிரசுரங்களைப் படியுங்கள், படித்த விஷயங்களை ஆழமாக யோசியுங்கள்.—யோவா 3:16; 15:13

பிரஸ்தாபிகள் சிலர், சிந்திக்க தினம் ஒரு வசனம் என்ற சிறுபுத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நினைவுநாள் பைபிள் வாசிப்புப் பகுதியைப் படித்து, ஆழமாக யோசிக்கிறார்கள். வேறுசிலர், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் இருக்கிற வசனங்களைப் படிக்கிறார்கள். இன்னும் சிலர், நினைவுநாளைப் பற்றியும் யெகோவாவும் இயேசுவும் நம்மீது காட்டியிருக்கும் அன்பைப் பற்றியும் விளக்குகிற காவற்கோபுர கட்டுரைகளைப் படிக்கிறார்கள். எப்படிப்பட்ட படிப்புத் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் சரி, யெகோவாவிடமும் இயேசுவிடமும் நெருங்கிப் போக அது உங்களுக்கு உதவட்டும்!