Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 10-13

யெகோவா நம்பகமானவர்

யெகோவா நம்பகமானவர்

10:13

யெகோவா நினைத்தால் நம்முடைய சோதனைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும். ஆனால், பெரும்பாலான சமயங்களில், சோதனையைச் சகித்துக்கொள்வதற்குத் தேவையான உதவியைச் செய்வதன் மூலம் சோதனையிலிருந்து “விடுபடுவதற்கு” அவர் வழி செய்கிறார்.

  • நாம் தெளிவாக யோசிப்பதற்கு யெகோவா உதவுகிறார், நம்மை உற்சாகப்படுத்துகிறார், ஆறுதல்படுத்துகிறார். அதற்காக, தன்னுடைய வார்த்தையையும் சக்தியையும் பயன்படுத்துகிறார். அதோடு, ஆன்மீக உணவையும் கொடுக்கிறார்.—மத் 24:45; யோவா 14:16, அடிக்குறிப்பு; ரோ 15:4

  • தன்னுடைய சக்தியின் மூலம் அவர் நம்மை வழிநடத்தலாம். பைபிள் சம்பவங்கள் மற்றும் நியமங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவரவும், ஞானமான முடிவுகளை எடுக்கவும் இது உதவும்.—யோவா 14:26

  • நமக்காகத் தேவதூதர்களை அவரால் பயன்படுத்த முடியும்.—எபி 1:14

  • மற்ற சகோதர சகோதரிகள் மூலமும் அவரால் உதவ முடியும்.—கொலோ 4:11