Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 13-19

ஆதியாகமம் 31

ஏப்ரல் 13-19
  • பாட்டு 76; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யாக்கோபும் லாபானும் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள்”: (10 நிமி.)

    • ஆதி 31:44-46—யாக்கோபும் லாபானும் கற்களைக் குவித்து, ஒப்பந்தத்துக்கு அடையாளமான உணவை அதன்மீது வைத்து சாப்பிட்டார்கள் (it-1-E பக். 883 பாரா 1)

    • ஆதி 31:47-50—அந்த இடத்துக்கு கலயெத் என்றும் காவற்கோபுரம் என்றும் பெயர் வைத்தார்கள் (it-2-E பக். 1172)

    • ஆதி 31:51-53—அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதுமே சமாதானமாக இருப்பதாக வாக்கு கொடுத்தார்கள்

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 31:19—ராகேல், தன்னுடைய அப்பாவுக்கு சொந்தமான குலதெய்வச் சிலைகளை ஏன் திருடியிருக்கலாம்? (it-2-E பக். 1087-1088)

    • ஆதி 31:41, 42—பிரியப்படுத்தக் கடினமானவர்களாக இருக்கிற முதலாளிகளிடம் எப்படி நடந்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி யாக்கோபின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (1பே 2:18; w13 3/15 பக். 21 பாரா 8)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 31:1-18 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அந்தச் சகோதரி வசனங்களை எப்படித் தெளிவாகப் பொருத்திக் காட்டினார்? மறுசந்திப்புக்கு அவர் எப்படி அடித்தளம் போட்டார்?

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 4)

  • முதல் சந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். சந்தோஷமான செய்தி என்ற சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு பாடம் 5-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 143

  • செயலற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்: (20 நிமிடத்துக்குள்) மூப்பர் கொடுக்கும் பேச்சு. யெகோவா தம்முடைய ஆடுகள்மீது அக்கறையாக இருக்கிறார் என்ற வீடியோவைப் போட்டுக்காட்டுங்கள். பிறகு, யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள் என்ற சிற்றேட்டில் பக்கம் 14-லிருந்து சில குறிப்புகளைக் கனிவோடு சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 50

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 133; ஜெபம்