ஆசீர்வாதத்துக்காகப் போராடுகிறீர்களா?
கடவுளுடைய அரசாங்கத்துக்குமுதலிடம் கொடுக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்; அப்படிச் செய்தால் யெகோவாவின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். (1கொ 9:26, 27) தேவதூதரோடு போராடும்போது யாக்கோபு என்ன மனப்பான்மையை காட்டினாரோ அதே மனப்பான்மையை யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது நாம் காட்டவேண்டும். யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக கடினமாகப் போராடுவதைநாம் எப்படிக் காட்டலாம்?
-
சபைக் கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரிப்பதன் மூலம்
-
ஊழியத்துக்குத் தவறாமல் போவதன் மூலம்
-
சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதன் மூலம்
நீங்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் சரி, யெகோவாவிடம் உதவி கேட்டு தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; அவரைச் சேவிப்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்க சொல்லி கேளுங்கள்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு வாழ்க்கையின் என்னென்ன அம்சங்களில் நான் இன்னும் கடினமாக உழைக்கவேண்டும்?’