Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: கடவுள் மனிதர்கள எதுக்காக படைச்சாரு?

வசனம்: ஆதி 1:28

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் எந்த நோக்கத்துக்காக மனிதர்கள படைச்சாரோ அது நிறைவேறுமா?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: கடவுள் எந்த நோக்கத்துக்காக மனிதர்கள படைச்சாரோ அது நிறைவேறுமா?

வசனம்: ஏசா 55:11

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளோட நோக்கம் நிறைவேர்ற சமயத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: கடவுளோட நோக்கம் நிறைவேர்ற சமயத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?

வசனம்: சங் 37:10, 11

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் கொடுக்கப்போற ஆசீர்வாதங்கள அனுபவிக்கணும்னா நாம என்ன செய்யணும்?

நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 14–ஏப்ரல் 7):

“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறதுக்கு வந்திருக்குறோம். உலகம் முழுசும் லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. இயேசுவோட நினைவுநாள் நிகழ்ச்சிதான் அது” என்று சொல்லி, அழைப்பிதழைக் கொடுங்கள். பிறகு, “நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி நடக்குற நேரமும் இடமும் இதுல போட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விசேஷ பேச்சு இருக்கு. அதுக்காகவும் உங்கள அழைக்கிறோம்” என்று சொல்லுங்கள்.

ஆர்வம் காட்டினால் மறுசந்திப்புக்கான இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: இயேசு ஏன் இறந்தாரு?