Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி செய்துகொண்டே இருங்கள்

பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி செய்துகொண்டே இருங்கள்

ஒரு விளையாட்டு வீரருக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், பகுத்தறியும் திறன்களை நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டுமென்றால் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். (எபி 5:14) பொதுவாக, மற்றவர்கள் என்ன முடிவுகளை எடுத்திருக்கிறார்களோ அதே முடிவை எடுக்கலாம் என்ற எண்ணம் நமக்கு வரலாம். ஆனால், பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்தி நாமாகவே முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனென்றால், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் கடவுளிடம் கணக்குக் கொடுக்க வேண்டும்.—ரோ 14:12.

நாம் ரொம்ப வருஷங்களாக யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறோம் என்பதற்காக நல்ல முடிவுகளை எடுத்துவிடுவோம் என்று சொல்லிவிட முடியாது. ஞானமான முடிவுகளை எடுக்க, யெகோவாவையும் பைபிளையும் அமைப்பையும் முழுமையாக நம்பியிருக்க வேண்டும்.—யோசு 1:7, 8; நீதி 3:5, 6; மத் 24:45.

“நல்ல மனசாட்சியோடு இருங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • எதைப் பற்றி எம்மா முடிவு எடுக்க வேண்டியிருந்தது?

  • மனசாட்சியின் அடிப்படையில் ஒருவர் முடிவெடுக்கும் சூழ்நிலையில், நாம் ஏன் நம்முடைய கருத்துகளை அவரிடம் சொல்லக் கூடாது?

  • ஒரு கணவனும் மனைவியும் எம்மாவுக்கு என்ன ஆலோசனை கொடுத்தார்கள்?

  • சரியான முடிவை எடுப்பதற்கு, எங்கிருக்கும் தகவல் எம்மாவுக்கு உதவியாக இருந்தது?