கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உயிர்த்தெழுதல் நடக்கும்வரை
நாம் உயிருக்கு உயிராய் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது, உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு ஆறுதல் கொடுக்கிறது. ஆனாலும், பாவமும் மரணமும் ஒரு கம்பளியைப் போல மூடி நம்மை மூச்சுத் திணற வைக்கின்றன. (ஏசா 25:7, 8) “எல்லா படைப்புகளும் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பைபிள் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம். (ரோ 8:22) உயிர்த்தெழுதல் நடக்கும்வரை நம்முடைய அன்பானவர்களின் இழப்பை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? அதற்கு உதவுகிற ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன.
பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
டான்யெலும் மாசெஹிரோ-யொஷமி தம்பதியும் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்?
-
வீடியோவில் பார்த்த ஐந்து ஆலோசனைகள் அவர்களுக்கு எப்படி உதவியாக இருந்தன?
-
உண்மையான ஆறுதலை யாரால் கொடுக்க முடியும்?—2கொ 1:3, 4.