கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மனம் நொந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்
நாம் எல்லாருமே சில சமயம் சோகமாக இருக்கிறோம். அதற்காக, யெகோவாவோடு நமக்கு ஒரு நல்ல பந்தம் இல்லை என்று அர்த்தம் கிடையாது. சொல்லப்போனால், யெகோவாவும் சோகமாக இருந்த சமயங்கள் உண்டு. (ஆதி 6:5, 6) ஆனால், நாம் அடிக்கடி சோகமானால் அல்லது சோகக் கடலில் மூழ்கிப்போனால் என்ன செய்வது?
உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். நம் உணர்வுகளை யெகோவா பெரிதாக பார்க்கிறார்; மனதளவில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் எப்போது சந்தோஷமாக இருக்கிறோம், எப்போது சோகமாக இருக்கிறோம் என்பது அவருக்கு தெரியும். நாம் ஏன் அப்படி உணர்கிறோம் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். (சங் 7:9ஆ) முக்கியமாக, நாம் சோகமாகவோ மனச்சோர்வால் கஷ்டப்படும்போதோ அவரால் நமக்கு உதவ முடியும்.—சங் 34:18.
மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத எண்ணங்களால் நம் மனதை குழப்பிக்கொண்டால், நாம் சந்தோஷத்தை இழந்துவிடலாம். யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பையும் அது பாதிக்கலாம். அதனால் நம் இதயத்தை பாதுகாக்க வேண்டும், அதாவது நம் யோசனைகளை கட்டுப்படுத்த வேண்டும்.—நீதி 4:23.
நம் சகோதரர்கள் எப்படி சமாதானத்தை அனுபவிக்கிறார்கள்—மனச்சோர்வால் தவிக்கும்போது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
மனச்சோர்வை சமாளிக்க நிக்கி என்ன நடைமுறையான விஷயங்களை செய்தார்?
-
தனக்கு மருத்துவ உதவி தேவை என்று நிக்கி ஏன் நினைத்தார்?—மத் 9:12
-
உதவிக்காக யெகோவாவை நம்பியிருந்ததை நிக்கி எப்படியெல்லாம் காட்டினார்?