Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 7-13

சங்கீதம் 92-95

அக்டோபர் 7-13

பாட்டு 84; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவாவை வணங்கினால் நம் வாழ்க்கை உண்மையிலேயே ரொம்ப அழகாக இருக்கும்!

(10 நிமி.)

நம்முடைய வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள யெகோவாதான் தகுதியானவர் (சங் 92:1, 4; w18.04 பக். 26 பாரா 5)

நல்ல தீர்மானங்களை எடுக்கவும் சந்தோஷமாக இருக்கவும் தன்னுடைய மக்களுக்கு அவர் உதவுகிறார் (சங் 92:5; w18.11 பக். 20 பாரா 8)

வயதான காலத்திலும் தனக்கு சேவை செய்கிறவர்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார் (சங் 92:12-15; w20.01 பக். 19 பாரா 18)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நான் ஏன் தயங்குகிறேன்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 92:5—யெகோவாவின் ஞானத்தைப் பற்றி இந்த வசனம் என்ன சொல்கிறது? (cl பக். 176 பாரா 18)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிளைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொடுப்பீர்கள் என்பதை அந்த நபருக்குத் தெரியப்படுத்த சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. முன்பு பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவர், இப்போது ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 4)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) முன்னேற்றம் செய்யாத ஒரு பைபிள் மாணவரோடு கலந்துபேசுங்கள். (lmd பாடம் 12 குறிப்பு 5)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 5

7. இளம் பிள்ளைகளைக் கவலைகள் திணறடிக்கும்போது...

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவாவை வணங்குகிறவர்களையும் சில நேரம் கவலைகள் வாட்டி வதைக்கின்றன. உதாரணத்துக்கு, தாவீது நிறைய சமயங்களில் தாங்க முடியாது கவலையில் தவித்திருக்கிறார். அதே மாதிரி இன்றுள்ள நிறைய சகோதர சகோதரிகள்கூட கவலையில் கஷ்டப்படுகிறார்கள். (சங் 13:2; 139:23) வருத்தமான விஷயம் என்னவென்றால், இளம் பிள்ளைகள்கூட கவலைகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அளவுக்கு அதிகமான கவலையால் பாதிக்கப்படுகிற இளம் பிள்ளைகளுக்கு, அவர்கள் வழக்கமாக செய்யும் விஷயங்கள்கூட, உதாரணத்துக்கு ஸ்கூலுக்குப் போவது... கூட்டங்களுக்குப் போவது... போன்ற விஷயங்கள்கூட, பாரமாகத் தெரியும். இந்த பிரச்சனையால் ஒருவேளை திடீரென தாக்கும் தீவிரமான பயம் (panic attack) அவர்களுக்கு வரலாம் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள்கூட வரலாம்.

இளம் பிள்ளைகளே, அளவுக்கு அதிகமான கவலையில் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் உங்கள் அப்பா-அம்மாவிடமோ ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரிடமோ இதைப் பற்றிப் பேசுங்கள். யெகோவாவிடம் உதவி கேட்கவும் மறந்துவிடாதீர்கள். (பிலி 4:6) அவர் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார். (சங் 94:17-19; ஏசா 41:10) ஸ்டீங் என்ற சகோதரருடைய உதாரணத்தைக் கவனியுங்கள்.

யெகோவா என்னை கவனித்துக்கொண்டார் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

• எந்த பைபிள் வசனம் ஸ்டீங்-க்கு உதவியது, ஏன்?

• யெகோவா அவரை எப்படிக் கவனித்துக்கொண்டார்?

பெற்றோர்களே, தாங்க முடியாத கவலையை பிள்ளைகள் சமாளிப்பதற்கு உங்களால் உதவி செய்ய முடியும். அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேளுங்கள்; அவர்கள்மேல் அன்பு வைத்திருப்பதை வெளிப்படையாகக் காட்டுங்கள்; யெகோவா அவர்களை நேசிக்கிறார் என்பதை அவர்கள் நம்புவதற்கு உதவி செய்யுங்கள். (தீத் 2:4; யாக் 1:19) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவி செய்யும்போது உங்களுக்குத் தேவையான ஆறுதலையும் பலத்தையும் யெகோவா கொடுப்பார். அதனால் அவரிடம் உதவி கேளுங்கள்.

சபையில் யாராவது அளவுக்கு அதிகமான கவலையில் தவித்துக்கொண்டிருந்தால் அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியே தெரிந்தாலும், அவர் படும் கஷ்டம் நமக்கு முழுவதுமாகப் புரியாமல் இருக்கலாம். ஆனாலும், சபையில் இருக்கும் எல்லார்மீதும் அன்பு காட்டும்போது... அவர்கள் நமக்கு முக்கியம் என்பதைக் காட்டும்போது... கவலையில் தவிப்பவர்களுக்கும் நம்மால் உதவி செய்ய முடியும்.—நீதி 12:25; எபி 10:24.

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 81; ஜெபம்