Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 16-22

சங்கீதம் 85-87

செப்டம்பர் 16-22

பாட்டு 41; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. சகித்திருக்க ஜெபம் உதவி செய்யும்

(10 நிமி.)

சந்தோஷத்தைத் தரச்சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள் (சங் 86:4)

எப்போதும் உண்மையாக இருக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள் (சங் 86:11, 12; w12 5/15 பக். 25 பாரா 10)

உங்கள் ஜெபங்களுக்கு யெகோவா பதில் தருவார் என்று நம்புங்கள் (சங் 86:6, 7; w23.05 பக். 13 பாரா. 17-18)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பிரச்சினையில் இருக்கும்போது நான் யெகோவாவிடம் அடிக்கடி பேசுகிறேனா, நிறைய நேரம் பேசுகிறேனா?’—சங் 86:3.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 86:11—தாவீது செய்த ஜெபத்திலிருந்து, ஒருவருடைய இதயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்? (it-1-E பக். 1058 பாரா 5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் வந்த செய்தியைக் கேட்டு கவலையில் இருப்பதாகப் போன தடவை உங்களிடம் சொல்லியிருந்த ஒருவருக்கு பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 15 குறிப்பு 5. அடுத்த வாரம் உங்களால் பைபிள் படிப்பை நடத்த போக முடியாது என்பதால் படிப்பை நடத்த வேறு என்ன செய்வது என்று உங்கள் பைபிள் மாணாக்கரோடு கலந்துபேசுங்கள். (lmd பாடம் 10 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 83

7. சோர்ந்துவிடாதே!

(5 நிமி.) கலந்துபேசுங்கள்.

வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • ஊழியம் செய்கிற விஷயத்தில் நாம் ஏன் சிலசமயம் சோர்ந்துபோக வாய்ப்பிருக்கிறது?

  • நாம் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?

8. பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்துகொண்டே இருங்கள்!

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

இந்த மாதத்தில் நடக்கும் விசேஷ ஊழியத்தில் இன்றும் என்றும் சந்தோஷம்!​ சிறுபுத்தகத்தை வைத்து பைபிள் படிப்பை ஆரம்பித்திருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ரொம்ப சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களைப் பார்த்து மற்றவர்களுக்கும் உற்சாகம் கிடைத்திருக்கும். ஆனால், இன்னும் உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு கிடைக்கவில்லை என்றால், ‘நான் இவ்வளவு முயற்சி செய்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அப்படியென்றால் நீங்கள் என்ன செய்யலாம்?

பொறுமை காட்டுவதன் மூலம், “எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்”—நல்ல செய்தியை அறிவிக்கும்போது என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • நீங்கள் ஊழியத்துக்காக எடுக்கும் முயற்சிகள் எல்லாம் புதைகுழிக்குள் போவதுபோல் தோன்றினால் 2 கொரிந்தியர் 6:4, 6 உங்களுக்கு எப்படி உதவும்?

  • பைபிள் படிப்பை ஆரம்பிக்க நீங்கள் எடுத்த முயற்சியில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்யலாம்?

நாம் எத்தனை பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருக்கிறோம் அல்லது நடத்திக்கொண்டு இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நம்முடைய சந்தோஷம் இல்லை. நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ரொம்ப உயர்வாக நினைக்கிறார், அதை நினைத்து சந்தோஷப்படுங்கள். (லூ 10:17-20) ‘நம் எஜமானுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாது.’ (1கொ 15:58) அதனால் இந்த விசேஷ ஊழியத்தில் தொடர்ந்து முழு மூச்சோடு கலந்துகொள்ளுங்கள்.

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 39; ஜெபம்