Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 9-15

சங்கீதம் 82-84

செப்டம்பர் 9-15

பாட்டு 80; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஆலயத்தின் பிரகாரத்தில் இருக்கும் ஒரு தகைவிலான் குருவி கூட்டை, கோராகுவின் மகன்களில் ஒருவர் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்

1. உங்களுக்குக் கிடைத்திருக்கிற பொறுப்புகளுக்காக நன்றியோடு இருங்கள்

(10 நிமி.)

நமக்குக் கிடைத்திருக்கும் பொறுப்புகளை நாம் ரொம்ப உயர்வாக நினைக்கிறோம் (சங் 84:1-3; wp16.6-E பக். 8 பாரா. 2-3)

நீங்கள் ஆசைப்பட்ட பொறுப்பு கிடைக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள். கிடைத்த பொறுப்பை சந்தோஷமாக செய்யுங்கள் (சங் 84:10; w08 7/15 பக். 30 பாரா. 3-4)

யெகோவா தனக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார் (சங் 84:11; w20.01 பக். 17 பாரா 12)

எந்த நியமிப்பாக இருந்தாலும் உங்களால் என்ஜாய் பண்ண முடியும்; அதேசமயம் அதில் சில சவால்களும் இருக்கும். சவால்களைப் பற்றி மட்டுமே யோசித்தீர்கள் என்றால் அந்த நியமிப்பை உங்களால் சந்தோஷமாக செய்ய முடியாது.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 82:3—சபையில் இருக்கிற “அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு” நாம் அன்பும் அக்கறையும் காட்டுவது ஏன் ரொம்ப முக்கியம்? (it-1-E பக். 816)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. அனுதாபம்—இயேசு என்ன செய்தார்

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 9 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. அனுதாபம்—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 9 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 57

6. சபை தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 130; ஜெபம்